கனடா செய்திகள்

June மாத விற்பனை அதிகரித்துள்ள போதிலும் CREA இனால் 2024 இற்கான வீட்டுச் சந்தைக்கான முன்னறிவிப்பு குறைப்பு

2024 இல் எதிர்பார்க்கப்படும் குறைவான வட்டி விகிதக் குறைப்புகளால் இந்த ஆண்டின் எஞ்சிய காலத்திற்கான அதன் வீட்டுச் சந்தை முன்னறிவிப்பைக் குறைப்பதாக Canadian Real Estate Association கூறுகின்றது. மேலும் இந்த ஆண்டு 472,395 சொத்துக்கள் கைமாறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 2023 ஆம் ஆண்டிலிருந்து 6.1% அதிகரிப்பைக் குறிக்கும் வகையில், தேசிய வீட்டுச் சந்தையில் படிப்படியாக மீண்டு வரும் என்று சங்கம் எதிர்பார்க்கின்றது.

June மாதத்தில் வீட்டு விற்பனையின் சராசரி விலை $696,179 ஆக இருந்ததுடன் இது 2023 இல் இருந்து 1.6% குறைந்துள்ளது. 2024 இல் 2.5% வருடாந்திர அதிகரிப்பு $694,393 ஆக இருக்கும் என்று CREA கணித்துள்ளது. மேலும் ஆண்டுக்கு ஆண்டு விற்பனை 9.4% சரிந்தது, ஆனால் கனடாவின் முதல் வங்கி விகிதக் குறைப்புக்குப் பிறகு மாதத்திற்கு 3.7% அதிகரித்துள்ளது.

June மாத இறுதியில் கனடா முழுவதும் ஏறத்தாழ 180,000 சொத்துக்கள் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 26% அதிகமாகும். ஆனாலும் இவ் எண்ணிக்கை இந்த ஆண்டின் வரலாற்று சராசரியான 200,000 க்கும் குறைவாக உள்ளது.

Related posts

நாடு முழுவதும் போதைக்கு அடிமையானவர்களுக்கு கட்டாய சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் இல்லை – அமைச்சர் தெரிவிப்பு

admin

2024 கணக்கெடுப்பில் AI இற்காக $2.4 பில்லியன் முதலீடு – Trudeau அறிவிப்பு

admin

கனடாவில் பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்; பெல்ஜியம் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

admin