Ontario இன் மதுக்கடைகள் இந்த மாத தொடக்கத்தில் மூடப்பட்ட வேலைநிறுத்தத்தின் பின்னர் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளன. Liquor Control Board of Ontario (LCBO) இன் சுமார் 10,000 தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 700 கடைகளைத் திறப்பதற்குத் தயாராக திங்கள்கிழமை திரும்பினர்.
இன்று முதல் LCBO வாடிக்கையாளர்கள்in-store shopping இனை மீண்டும் தொடங்கலாம் மற்றும் online இல் shopping இனைத் தொடரலாம். online பெறுவனவுகளிற்கு இனி தயாரிப்பு வரம்புகள் இருக்காது, ஆனால் அனைத்து online பெறுவனவுகளிற்கும் delivery fee கட்டணத்துடன் குறைந்தபட்ச செலவு $50 இருக்கும். online பெறுவனவுகளைப் பெறுவதற்கு மூன்று வாரங்கள் வரை ஆகலாம் என LCBO தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் LCBO க்கு onlineorders@lcbo.com இல் மின்னஞ்சல் செய்வதன் மூலம் online பெறுவனவுகளை ரத்து செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LCBO ஒப்பந்தத்தின் விவரங்களை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. மூன்று ஆண்டுகளில் எட்டு சதவீத ஊதிய உயர்வு மற்றும் சுமார் 1,000 சாதாரண ஊழியர்களை நிரந்தர பகுதி நேரப் பணியிடங்களுக்கு மாற்றுவது மற்றும் கடைகள் மூடப்படுவதில்லை ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.