கனடா செய்திகள்

ஐ.நா.வின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பின் தலைவராக Bob Rae தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடாவின் தூதரான Bob Rae ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக ஆலோசனை சபைக்கான தலைவராக ஒரு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக Global Affairs Canada தெரிவித்துள்ளது.

இவ் பொருளாதார மற்றும் சமூக ஆலோசனை சபை ஆனது ஐநாவின் முக்கிய ஆறு அமைப்புகளில் ஒன்றாகும் மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கான அதன் பணிகளை ஒருங்கிணைக்கிறது.

Rae இன் ஜனாதிபதி பதவியானது நிலையான வளர்ச்சி, உலகளாவிய இடம்பெயர்வு மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கான நிதி தீர்வுகளுக்கு செயற்கை நுண்ணறிவின் நெறிமுறை பயன்பாடு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பார் என Global Affairs தெரிவித்துள்ளது. மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பட்டய அமைப்பின் தலைவராக இருக்கும் மூன்றாவது கனேடியர் Rae ஆவார்.

Related posts

CSIS இயக்குனரான David Vigneault 7 வருடங்களிற்கு பின் பணியில் இருந்து விலகுகின்றார்

admin

Conservatives மூலதன ஆதாய வரி சீர்திருத்தங்களுக்கு எதிராக உள்ளனர்

admin

கனடாவின் வேலையின்மை விகிதம் மார்கழி மாதத்தில் 5.8% ஆல் நிலையாக உ‌ள்ளது.

Editor