கனடா செய்திகள்

பெண்களுக்கான 200m backstroke போட்டியில் கனேடிய வீராங்கனை Kylie Masse வெண்கலம் வென்றார்

வெள்ளிக்கிழமை ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் backstroke போட்டியில் கனேடிய நீச்சல் வீராங்கனை Kylie Masse வெண்கலப் பதக்கம் வென்றார். Ontario இல் உள்ள LaSalle இனைச் சேர்ந்த 28 வயதான இவர், தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் கனேடிய நீச்சல் வீரர் ஆவார்.

Paris இல் கனடாவின் ஐந்தாவது ஒலிம்பிக் நீச்சல் பதக்கம் இதுவாகும். 2016 இல் Rio இல் நடந்த 100 மீட்டர் backstroke இல் Masse வெண்கலப் பதக்கம் வென்றார் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு Tokyo இல் 100 மற்றும் 200 backstroke போட்டிகள் இரண்டிலும் இவர் இரண்டாவதாக இரட்டை வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இதற்கிடையில், ஆண்களிற்கான freestyle ​​இறுதிப் போட்டியில் கனடாவின் Josh Liendo ஒரு வினாடியில் இருநூறில் ஒரு பங்கு வித்தியாசத்தில் மேடையைத் தவறவிட்டார். இதன் போது 21.58 வினாடிகளில் Liendo நான்காவது இடத்தைப் பிடித்தார். பிரான்சின் Florent Manadou வெண்கலப் பதக்கத்தை வென்றார். வியாழன் அன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் Liendo ஒன்பதாவது இடத்தைப் பிடித்ததுடன் வெளியேற்றப்பட்டதாகத் தோன்றுகின்றது. இதில் ஆஸ்திரேலியாவின் Cameron McEvoy தங்கம் வென்றார்.

Related posts

குழந்தைகளை மையமாகக் கொண்டு உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியாக $5.7M நிதி வழங்க கனடா உறுதி

admin

Copa América semifinal இல் Argentina 2-0 என்ற வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தியது

admin

TD வங்கிப் பணப்பரிவர்த்தனை தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கான செய்தி

Editor