கனடா செய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களால் எந்த நாட்டிற்கும் ஆதாயம் இல்லை – G7 வெளியுறவு அமைச்சர்கள் தெரிவிப்பு

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly மற்றும் அவரது G7 சகாக்கள் மத்திய கிழக்கில் பதட்டங்களைத் தணிக்க அழைப்பு விடுத்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். மேலும் கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியுடன் இணைந்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இவ் அறிக்கையானது மத்திய கிழக்கில் மேலும் தீவிரமடைவதால் எந்த நாடும் அல்லது தேசமும் பயனடையாது என்று கூறி பழிவாங்கும் வன்முறையை தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறது.

ஈரானில் ஹமாஸ் தலைவர் Ismail Haniyeh படுகொலை செய்யப்பட்ட பின்னர், மத்திய கிழக்கில் ஒரு முழுமையான பிராந்திய யுத்தம் ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. புதனன்று நடந்த இத் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் Haniyeh மற்றும் பிற ஹமாஸ் தலைவர்களைக் கொன்றுவிடுவதாக சபதம் செய்த இஸ்ரேல் மீது சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது.

கணிக்க முடியாத பாதுகாப்பு நிலைமை மற்றும் தற்போதைய பிராந்திய மோதல்கள் காரணமாக இஸ்ரேலுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனேடியர்களை Global Affairs Canada எச்சரித்துள்ளது.

Related posts

Hydro வெடிப்பினால் இரண்டு தொழிலாளர்கள் படுகாயம்: நூற்றுக்கு மேற்ப்பட்டடோர் மின் தடையால் அவதி

admin

Ottawa உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாத புதியவர்களுக்கான பாதையை உருவாக்குகிறது

admin

Trudeau இற்கு எதிராக வன்முறை மிரட்டல் விடுத்த நபர் RCMP இனால் கைது

admin