கனடா செய்திகள்

ஒலிம்பிக்கில் சுத்தியல் எறிதலில் கனடாவின் Ethan Katzberg தங்கம் வென்றார்

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான சுத்தியல் எறிதலில் Ethan Katzberg தங்கப்பதக்கம் வென்றார். இந்த நிகழ்வில், 1912 இல் Stockholm விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற Duncan Gillis இற்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் கனேடியர் என்ற பெருமையைப் பெற்றார்.

Stade de பிரான்சில் Katzberg 84.12 மீட்டர் எறிதலுடன் போட்டியினைத் தொடங்கினார். 82.28 மீட்டரில் இரண்டாவது சிறந்த எறிதலையும் அவர் பெற்றிருந்தார். இப் போட்டியில் வேறு எந்தப் போட்டியாளரும் 80 மீட்டரை எட்டவில்லை. மற்றும் Katzberg இன் பயிற்சியாளர் Dylan Armstrong ஆண்கள் குண்டு எறிதலில் 2008 ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார்.

22 வயதான Katzberg 2022 இல் Commonwealth விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பதிலிருந்து 2023 இல் உலக சாம்பியனாகவும் இப்போது ஒலிம்பிக் சாம்பியனாகவும் மாறியுள்ளார். இந்த நிகழ்வில் பதக்கம் வென்ற மற்றும் உலகப் பட்டத்தை வென்ற முதல் மற்றும் ஒரே கனேடிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

Related posts

கனடாவில் குறுகிய கால வீட்டு வாடகைத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு.

Canadatamilnews

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட Toronto இனைச் சேர்ந்த பெண்ணிற்கு கனடா முழுவதும் warrant பிறப்பிக்கப்பட்டுள்ளது

admin

உங்களிற்கான தடுப்பூசிகளை பெறுங்கள் – கனடா வந்தோருக்கான தடுப்பூசிகளை இன்னும் பூர்த்தி செய்யவில்லை

admin