கனடா செய்திகள்

Trudeau இற்கு எதிராக வன்முறை மிரட்டல் விடுத்த நபர் RCMP இனால் கைது

Greater Toronto பகுதியில் RCMP அதிகாரிகளினால் 33 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் online மூலமாக வீடியோ ஒன்றில் பிரதம மந்திரி Justin Trudeau இனை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அந்த நபர் அவரது திட்டங்களில் தலையிட முயற்சிக்கும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் வன்முறை அச்சுறுத்தல்களை விளைவித்ததாக கூறப்படுகின்றது.

RCMP இனால் கைது செய்யப்பட்ட அச் சந்தேக நபர் 33 வயதான Dawid Zalewski என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலும் அவர் மீது மிரட்டல் விடுத்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிரதமரை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. York பிராந்திய பொலிசார் சந்தேக நபரை விரைவாக கண்டுபிடித்து கைது செய்ய உதவியதாக The Mounties குறிப்பிட்டுள்ளது.

Related posts

ServiceOntario ஊழியர் சம்பந்தப்பட்ட வாகனத் திருட்டு விசாரணையில் 100க்கும் மேற்பட்ட திருடப்பட்ட வாகனங்கள் மீட்டெடுப்பு: Toronto police

admin

Niagara பிராந்தியத்தின் Hamilton இல் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குழுவொன்று தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

admin

Toronto இன் Port Lands இல் ஏற்ப்பட்ட தீ விபத்தில் காயங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை

admin