கனடா செய்திகள்

கனேடியர்கள் அதிக காட்டுத்தீ மற்றும் சூறாவளிகளுக்கு தயாராக இருக்க வேண்டும் – Environment Canada

புயல் மற்றும் தீ போன்ற தீவிர வானிலையை கொண்டு வரும் வெப்ப அலைகள் மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் மிகவும் பொதுவானதாகி வருவதாக மத்திய அரசு கூறுகிறது. மற்றும் இம்மாதம் British Columbia முதல் Manitoba வரை காட்டுத்தீ அதிகமாக இருக்கும் என்றும், பருவநிலை மாற்றத்தை தூண்டும் என்றும் இயற்கை வள அமைச்சர் Jonathan Wilkinson தெரிவித்தார்.

நாடு முழுவதும் 474 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன, கடந்த ஆண்டு இந்த நேரத்தில் சுமார் 900 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டு 150 க்கும் மேற்பட்ட தீயானது Jasper, Alta உட்பட இதுவரை 3.4 மில்லியன் hectares இற்கு மேல் எரிக்கப்பட்ட நிலையில் கட்டுப்பாட்டில் இல்லை என்று கருதப்படுகிறது. இதுவரை தீயினால் எரிக்கப்பட்ட பகுதியின் 25 ஆண்டு சராசரியை விட இது அதிகம் ஆகும். மேலும் இச் செப்டம்பர் மாதத்தில் தீ நடவடிக்கை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனேடியர்களை இந்தப் பருவத்தில் அதிகப் பெயரிடப்பட்ட புயல்களுக்கு தயார்படுத்துமாறு Emergency Preparedness Minister ஆன Harjit Sajjan கேட்டுக்கொள்கிறார். Debby சூறாவளியின் எச்சங்கள் வெள்ளிக்கிழமை நாட்டின் கிழக்குப் பகுதிகளில் வீசியதுடன், திடீர் வெள்ளத்தால் பரவலான சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் திங்கட்கிழமை பிற்பகல் Montreal இல் 175 மில்லிமீட்டர் வரை மழை பெய்ததை அடுத்து, 14 நகராட்சிகள் அவசரகால நிலையில் இருப்பதாக Quebec அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப் புயலினால் 80 வயதுடைய ஒருவர் Batiscan ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் உயிரிழந்தார். புயலின் போது சுமார் 550,000 Hydro-Québec வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.

Related posts

தொழிலாளர் பற்றாக்குறையை அணுகுவதற்கு Liberal immigration pivot ஆனது கனடாவை கட்டாயப்படுத்துகிறது

admin

கனடாவில் அடுத்த வாரம் முதல் Ozempic இன் எடை குறைப்பு மருந்துதான Wegovy கிடைக்கும்

admin

கனேடிய iphone பாவனையாளர்களுக்கான செய்தி!

Editor