கனடா செய்திகள்

ஜூன் மாதத்தில் மொத்த விற்பனை 0.6% குறைவு – Statistics Canada

பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் பிற hydrocarbons மற்றும் எண்ணெய் வித்துக்கள் மற்றும் தானியங்களைத் தவிர்த்து மொத்த விற்பனை ஜூன் மாதத்தில் 0.6 சதவீதம் சரிந்து 82.4 பில்லியன் டாலராக இருந்ததாக கனடாவின் புள்ளிவிவரம் கூறுகின்றது. மேலும் ஏழு துணைத் துறைகளில் ஐந்தில் விற்பனை குறைந்துள்ளதாக  agency கூறுகின்றது.

மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் துணைப் பிரிவின் விற்பனை 2.6 சதவீதம் சரிந்து 14.2 பில்லியன் டாலராகவும், மோட்டார் வாகன வணிகர் மொத்த விற்பனையாளர்கள் பிரிவில் 2.5 சதவீதம் குறைந்து 11.5 பில்லியன் டாலராகவும் உள்ளது.

இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் விநியோக துணைத் துறை ஜூன் மாதத்தில் 0.5 சதவீதம் குறைந்து $17.9 பில்லியனாக இருந்தது. மற்றும் அளவு அடிப்படையில், ஜூன் மாதத்தில் மொத்த விற்பனை 0.9 சதவீதம் குறைந்துள்ளது.

Related posts

நிரந்தர வதிவிடத்திற்கான பாதையை வழங்கும் இரண்டு முக்கிய மூலங்களை Quebec முடக்குகிறது

admin

June 24 அன்று Toronto-St. Paul’s இடைத்தேர்தலுக்கு அழைப்பு

admin

இந்த வருடம் முதல்(2024) Highway 407ஐப் பயன்படுத்தவுள்ள Ontario வாகன ஓட்டுனர்களுக்கு கட்டண அதிகரிப்பு.

Editor