கனடா செய்திகள்

செப்டம்பர் 1 முதல் Ontario பாடசாலைகளில் phones மற்றும் vaping தொடர்பான புதிய விதிகள் அமுலுக்கு வருகின்றன

மாகாணத்தின் சமீபத்தில் நியமிக்கப்பட்ட கல்வி அமைச்சர் Jill Dunlop வியாழன் அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது mobile பயன்பாடு மற்றும் வகுப்பறைகளில் சட்டவிரோதமாக vaping செய்வதை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

மழலையர் பள்ளி முதல் தரம் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் full instructional day இற்கு phones தடைசெய்யப்படும் என்றும், ஏழாவது மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் போது mobile சாதனங்களை turn off செய்ய வேண்டும் அல்லது silent mode இல் அமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். மேலும் அவர் கல்வித் தேவைகளுக்காக அல்லது மருத்துவ நிலையைக் கண்காணிக்க தங்கள் mobile சாதனம் தேவைப்படும் மாணவர்கள் அவற்றைப் பயன்படுத்த முடியும் எனவும் கூறினார்.

nicotine மற்றும் புகையிலை பொருட்களுடன் vaping சாதனங்களிற்கான தடையை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது. பதவி ஏற்று இரண்டு வாரங்களுக்குப் பிறகு கல்வி அமைச்சரான Jill Dunlop இன் முதல் நிகழ்வு இதுவாகும்.

பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான கற்றல் திட்டத்தை செயல்படுத்த $47.5 மில்லியன் செலவழிப்பதாக மாகாணம் கூறுகிறது. பணம் பணம் எவ்வாறு செலவிடப்படும் என்னும் விபரம்:

  • vape detectors மற்றும் வேறு security upgrades இற்காக $30 மில்லியன்,
  • போதைப்பொருள் பயன்பாடு மற்றும் போதை பழக்கவழக்கங்களால் ஆபத்தில் இருக்கும் மாணவர்களுக்கு நேரடி ஆதரவை வழங்கும் திட்டங்களை விரிவுபடுத்த பயன்படுத்த $15 மில்லியன்,
  • பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் vaping மற்றும் அதிகப்படியான cellphone உபயோகத்தால் ஏற்படும் பாதகமான விளைவுகளைப் பற்றி எப்படிப் பேசுவது என்பதை அறியப்படுத்த School Mental Health Ontario இற்கு $1 மில்லியன்,
  • vaping மற்றும் cellphone கவனச்சிதறல்களைத் தடுக்க அடிமட்ட பிரச்சாரங்களை நடத்த பள்ளி வாரியங்களுக்கு $1.5 மில்லியன்

உம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ் விதிகளை பின்பற்றாத மாணவர்கள் வகுப்பறையில் ஒரு பாதுகாப்பான இடத்தில் செல்போனை வைக்கும்படி கேட்கப்படுவார்கள், மேலும் அவர்கள் தலைமையாசிரியர் அலுவலகத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

Related posts

இந்த வாரத்திற்கான மதுபானங்கள் Ontario இன் உரிமம் பெற்ற மளிகைக் கடைகளுக்கு வழங்க தயாராகின்றன

admin

மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடிக்கு Trudeau வாழ்த்து தெரிவிப்பு

admin

COVID கால CERB கொடுப்பனவுகளை தகாத முறையில் பெற்ற 185 ஊழியர்களை CRA பணி நீக்கம் செய்துள்ளது.

Editor