கனடா செய்திகள்

New York இல் பயங்கரவாத சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் கனடியர் ஒருவர் Quebec இல் கைது செய்யப்பட்டார்

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் 20 வயதான Muhammad Shahzeb Khan, பயங்கரவாதத்திற்கு சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் கடந்த கோடையில் Ontario இல் ஒரு தந்தையும் மகனும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்த பிறகு பதற்றமடைந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் Toronto இல் ஏற்ப்பட்ட கைதினால் தனது சொந்தத் திட்டங்களினைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று encrypted செய்தியினைப் பயன்படுத்தியதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இச் செய்தியைப் பெற்ற நபர் Khan இன் கூட்டாளி அல்ல. அவர்கள் ஒரு இரகசிய அமெரிக்க முகவர் ஆவர்.

Shahzeb Jadoon எனவும் அழைக்கப்படுகின்ற Khan, Brooklyn இல் உள்ள Jewish centre இனை இஸ்லாமிய அரசு என்ற பெயரில் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளால் தாக்க சதி செய்ததாகக் கூறப்பட்டு Quebec இல் உள்ள Ormstown இல் வைத்து புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகளும் RCMPயும் வெள்ளிக்கிழமை அறிவித்தனர். ISIS என்ற பெயரில் முடிந்தவரை பல யூதர்களை படுகொலை செய்யும் குறிக்கோளை Khan கொண்டிருந்ததாக United States Attorney General Merrick Garland தெரிவித்தார்.

Khan கடந்த நவம்பரில் இருந்து ISIS இற்கு தனது ஆதரவையும், ISIS இற்கு ஆதரவாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கான தனது விருப்பத்தையும் மீண்டும் மீண்டும் வெளிப்படையாக வெளிப்படுத்தினார் என்று புகார் கூறுகிறது. மேலும் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு பொருள் ஆதரவு மற்றும் ஆதாரங்களை வழங்க முயற்சித்த ஒரு குற்றச்சாட்டை அவர் எதிர்கொள்ள நேரிடும் என்று அது கூறியது.

கனடாவில் Khan மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். பயங்கரவாதக் குழுவிற்காக ஒரு குற்றத்தைச் செய்ய கனடாவை விட்டு வெளியேற முயற்சி செய்தல், பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்பது மற்றும் அமெரிக்க குடியேற்றச் சட்டத்தை மீறுவதன் மூலம் ஒரு குற்றத்தைச் செய்ய சதி செய்தல் அல்லது சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சி செய்தல் என்பனவாகும். Khan செப்டம்பர் 13 அன்று Montreal இல் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பதாகவும், அமெரிக்கா நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் Mounties கூறினார்.

Related posts

இந்த வருடம் முதல்(2024) Highway 407ஐப் பயன்படுத்தவுள்ள Ontario வாகன ஓட்டுனர்களுக்கு கட்டண அதிகரிப்பு.

Editor

Lebanon இல் மனிதாபிமான உதவிக்காக கனடாவினால் $10 மில்லியன் அறிவிக்கப்பட்டுள்ளது

admin

கனடாவின் Haiti airlift ஆனது குடியிருப்புக்கள், உறவினர்கள் மற்றும் charter flight வசதிகளை கொண்டதாக விரிவாக்கப்படுகின்றது

admin