கனடா செய்திகள்

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட Toronto இனைச் சேர்ந்த பெண்ணிற்கு கனடா முழுவதும் warrant பிறப்பிக்கப்பட்டுள்ளது

Toronto இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண்ணுக்கு கனடா முழுவதும் warrant பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1 ஆம் திகதி Eglinton Avenue West மற்றும் York இல் உள்ள Times Road இற்கு சுமார் 6:19 a.m மணியளவில் Toronto போலீசார் அழைக்கப்பட்டனர். அங்கு வந்தவுடன், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு சந்துப் பாதையில் Brampton இனைச் சேர்ந்த 37 வயதான Triston McNally இனைக் கண்டுபிடித்ததாக போலீஸார் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பின்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

McNally இன் மரணம் தொடர்பாக நாடு முழுவதும் முதல் நிலை கொலைக்காக Toronto இனைச் சேர்ந்த ​​36 வயதான Stacey Downey தேடப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் Downey இன் படத்தைப் பொலிசார் வெளியிட்டு தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வாளர்களைத் தொடர்புகொள்ளும்படி ஊக்குவிக்கின்றனர்.

Related posts

பாரிஸில் நடந்த கனடாவின் ஒலிம்பிக் கோடைகால விளையாட்டுப் போட்டிகளில் ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்தன

admin

Trudeau D-Day இன் 80 ஆவது நிறைவை France இன் Juno Beach இல் கொண்டாடவுள்ளார்

admin

காட்டுத்தீ காரணமாக Quebec இன் அதிகபட்ச பாதுகாப்பு சிறையான Port-Cartier இனை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது

admin