கனடா செய்திகள்

கூடிய விரைவில் கூட்டாட்சித் தேர்தலை நடத்த முயற்சிப்பதாக Poilievre உறுதியளிக்கிறார்

House of Commons இலையுதிர் அமர்வுக்கு திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட்டாட்சி தேர்தலை விரைவில் தொடங்க முயற்சிப்பதாக Conservative தலைவர் Pierre Poilievre கூறுகின்றார். மேலும் புதன் அன்று பாராளுமன்றத்தில் பேசிய போது கனேடியர்களை தேர்தலுக்கு அனுப்ப விரும்புவதாகவும், அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு கூடிய விரைவில் ஒரு பிரேரணையை முன்வைப்பதாகவும் Poilievre முன்பு கூறியதை உறுதிப்படுத்தினார்.

Pierre Poilievre இன் ஆலோசனையை நம்பப் போவதில்லை என்று NDP தலைவர் Jagmeet Singh கூறியுள்ளார்.

அரசாங்கத்தை வீழ்த்துவதில் Conservatives கட்சிகளுடன் சேருமாறு Bloc Québécois பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் Poilievre அழைப்பு விடுத்தார். இதற்கிடையில் பிரதம மந்திரி Justin Trudeau, Conservatives இற்கு சவால் விடுவதற்கும், கனடியர்களில் முதலீடு செய்வதற்கான தனது திட்டத்துடன் அவர்களின் நிலைப்பாடுகளை வேறுபடுத்திப் பார்ப்பதற்கும் இலையுதிர்கால தேர்தலுக்கான உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

Montreal இன் LaSalle-Émard-Verdun riding மற்றும் Winnipeg இன் Elmwood-Transcona riding இல் உள்ள வாக்காளர்கள் திங்களன்று வாக்கெடுப்பில் கலந்துகொள்வார்கள்.மேலும் அடுத்த கூட்டாட்சி தேர்தல் அக்டோபர் 2025 இல் திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

அதிகரித்து வரும் வன்முறையினால் Lebanon இல் இருந்து வெளியேறும் விமானங்களுக்கு கனடா இருக்கைகளை முன்பதிவு செய்து வருகின்றது

admin

கனடாவில் உள்ள ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருப்பதால் கனடா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன

admin

பிராந்திய விரிவாக்கத்தைத் தூண்டும் நோக்கிலான ஈரானின் தாக்குதல் – G7 நாடுகள் எச்சரிக்கை

admin