கனடா செய்திகள்

Pablo Rodriguez அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தமையால் Trudeau Liberals இற்கு மேலும் சேதம் ஏற்பட்டது

Quebec Liberal கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்காக மத்திய போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இவர் அடுத்த ஜனவரி வரை நாடாளுமன்றத்தின் சுயேச்சை உறுப்பினராக அமர திட்டமிட்டுள்ளார். அத்தோடு உடனடியாக தேர்தல் நடைபெறுவதை அவர் விரும்பவில்லை என்றும் அதனால் Conservatives கட்சியினர் அடுத்த வாரம் முன்வைக்க விரும்பும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக Rodriguez கூறுகின்றார்.

கருவூல வாரியத்தின் தலைவரான Anita Anand போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றுவார், மேலும் Justin Trudeau இன் Quebec Lieutenant ஆக கொள்முதல் அமைச்சரான Jean Yves Duclos பணியாற்றுவார். Rodriguez இன் நட்பு மற்றும் வழிகாட்டுதலுக்காக Anand தனது நன்றியைத் தெரிவித்ததுடன், நிர்வாகத்திற்கும் தேசத்திற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் பாராட்டினார்.

திங்களன்று Montreal இல் நடந்த இடைத்தேர்தலில் முன்னாள் Liberal கோட்டையான LaSalle-Émard-Verdun இனை இழந்ததைத் தொடர்ந்து, Trudeau பதவி விலக வேண்டும் என்ற புதிய அழைப்புகளுக்கு மத்தியில் Rodriguez இன் ராஜினாமா முடிவானது பிரதம மந்திரிக்கு மேலும் பின்னடைவாகும்.

2022 மாகாணத் தேர்தலில் தோல்வியடைந்து Dominique Anglade ராஜினாமா செய்ததில் இருந்து Quebec Liberals தலைவர் இல்லாமல் உள்ளனர். இதனைத் தொடர்ந்து Anglade இற்குப் பிறகு போட்டியில் நுழைவதற்கான ஐந்தாவது வேட்பாளராக Rodriguez இணைகிறார். Rodriguez முதன்முதலில் 2004 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் அதற்கு முன்னர் கனடிய பாரம்பரிய அமைச்சராக பணியாற்றினார். 2011ல் தோல்வியடைந்து மீண்டும் 2015ல் பதவிக்கு வந்தார்.

Related posts

COVID கால CERB கொடுப்பனவுகளை தகாத முறையில் பெற்ற 185 ஊழியர்களை CRA பணி நீக்கம் செய்துள்ளது.

Editor

cross-country நிகழ்வுகளில் ஒக்டோபர் 7ல் உயிரிழந்தவர்களுக்கு கனடியர்கள் அஞ்சலி செலுத்தினர்

admin

கனடாவின் 4 முக்கிய நகரங்களில் போதைப்பொருள், துப்பாக்கி பயன்பாடு போன்ற குற்றங்கள் அதிகரிப்பு – CityNews கருத்துக்கணிப்பு

admin