கனடா செய்திகள்

Trudeau Haiti இன் தற்காலிக பிரதமரை சந்தித்து மனிதாபிமான உதவி கோருகின்றார்

Haiti இன் தற்போதைய மனிதாபிமான நெருக்கடியான கும்பல் வன்முறை, பசி மற்றும் அரசியல் ஸ்திரமின்மை உள்ளிட்டவற்றைத் தீர்க்க ஒரு விரிவான திட்டத்தில் ஒத்துழைக்குமாறு Justin Trudeau உலகத் தலைவர்களை வலியுறுத்தினார். Trudeau இற்கும், அந்நாட்டின் தற்காலிகப் பிரதமர் Garry Conille இற்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பைத் தொடர்ந்து இந்த உரை இடம்பெற்றது.

Haiti இன் தலைநகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய கிரிமினல் கும்பல்களால் அதிகரித்த அமைதியின்மை மற்றும் வன்முறை காரணமாக Ariel Henry இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதவியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து Conille அந்த பொறுப்பை ஏற்றார்.

இக் குழப்பத்தை ஏற்படுத்தும் கும்பல்களால் கிட்டத்தட்ட 580,000 மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும், உணவு, தண்ணீர், தங்குமிடம் மற்றும் மருத்துவப் பாதுகாப்பு போன்றவற்றின் கடுமையான பற்றாக்குறையை நாடு எதிர்கொள்வதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச்செயலாளர் Amina Mohammed கூறுயுள்ளார். மேலும் கும்பலை விரட்டுவதற்கான உலகளாவிய முயற்சியை வழிநடத்த கென்ய காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் Trudeau கூறினார்.

Related posts

ஆயுத விசாரணையில் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்: Waterloo Regional Police

admin

Copa America shootout இல் 4-3 என்ற கோல் கணக்கில் கனடா தோல்வியடைந்ததால் Uruguay மூன்றாவது இடத்தைப் பிடித்தது

admin

TD வங்கிப் பணப்பரிவர்த்தனை தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கான செய்தி

Editor