கனடா செய்திகள்

Trudeau நிர்வாகத்தை கவிழ்க்கும் முயற்சியில் Conservatives பிரேரணை ஒன்றை முன்வைக்கின்றனர்

முன்னறிவிக்கப்பட்ட மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட படி, Justin Trudeau இன் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் செவ்வாயன்று Pierre Poilievre இன் Conservatives நம்பிக்கையில்லா தீர்மானத்தை அறிமுகப்படுத்தினர். இது பிரேரணை நடவடிக்கைகள் தொடங்கும் போது சபாநாயகரால் வாசிக்கப்பட்டது. மற்றும் இதில் பிரதமர் மற்றும் அரசாங்கம் மீது சபைக்கு நம்பிக்கை இல்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Bloc Québécois மற்றும் NDP ஏற்கனவே புதன்கிழமை வாக்களிக்கப்படும் பிரேரணையை ஆதரிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளன. Poilievre நீண்ட காலமாக தற்போதைய நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட கார்பன் வரியை விமர்சித்து வருகிறார், மேலும் வீட்டுப் பிரச்சினை மற்றும் வன்முறை காரணமாக தேர்தலை விரும்புவதாகக் கூறினார்.

Trudeau திங்களன்று “The Late Show with Stephen Colbert” இல் உரையாற்றினார். இதன் போது நாடு ஒரு கடினமான நேரத்தை எதிர்கொள்கிறது, மக்கள் மளிகை பொருட்கள், வாடகை மற்றும் எரிபொருளுக்கு பணம் செலுத்த சிரமப்படுகிறார்கள் என்று கூறினார். பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, மக்களிடம் முதலீடு செய்வது மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் மாற்றத்திற்காக தொடர்ந்து போராடுவேன் என்று கூறினார்.

Related posts

கனடாவை 51வது நாடாக மாற்ற economic force இனைப் பயன்படுத்த போவதாக Trump மிரட்டல்

admin

Hydro வெடிப்பினால் இரண்டு தொழிலாளர்கள் படுகாயம்: நூற்றுக்கு மேற்ப்பட்டடோர் மின் தடையால் அவதி

admin

உள்நாட்டு பார்சல்களுக்கான முழு சேவையினையும் Canada Post மீண்டும் தொடங்கியுள்ளது

admin