Lebanon இல் கனேடியர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் உதவி வழங்குவதற்காக அந்த நபரின் குடும்பத்தினருடன் அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக Global Affairs Canada தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் Lebanon இனைத் தளமாகக் கொண்ட Hezbollah இற்கும் இடையே அதிகரித்து வரும் மோதலுக்கு மத்தியில் செப்டம்பர் பிற்பகுதியில் Lebanon இல் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இச் சம்பவம் நடந்துள்ளது.
1,050 க்கும் மேற்பட்ட கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் உடனடி குடும்ப உறுப்பினர்கள் Lebanon இனை விட்டு வெளியேற உதவியதாக Global Affairs கூறுகின்றது. மேலும் 25,000 க்கும் மேற்பட்ட கனேடியர்கள் Lebanon இல் இருக்க கூடும் என்று கருதப்படுகின்றது.