கனடா செய்திகள்

அடுத்த ஆண்டுக்கு முன் federal election இனை நடத்த வேண்டும் என்ற கனடாவின் விருப்பம் பிளவுபட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிப்பு

பிரதம மந்திரி Justin Trudeau புதன்கிழமை பதவி விலகுவதற்கான அழுத்தத்தை எதிர்கொள்கின்ற நிலையில், அனைத்து கனேடியர்களும் இன்னும் ஒரு கூட்டாட்சி தேர்தலுக்கு தயாராக இல்லை என்று சமீபத்திய கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.

Angus Reid Institute நடத்திய ஆய்வில் கனடாவின் Conservative கட்சியை ஆதரிக்கும் கனேடியர்கள் தேர்தலுக்கு அதிக விருப்பம் கொண்டிருந்தனர். இவ் Conservative ஆதரவாளர்களில் 73% பேர் இவ் அறிக்கையினை வலுவாக ஆதரிப்பதுடன், 18% பேர் வெறுமனே ஒப்புக்கொள்கிறார்கள்.

NDP உடனான வழங்கல் மற்றும் நம்பிக்கை ஒப்பந்தம் முடிவடைந்ததில் இருந்து Conservative இனைச் சார்ந்தோர் Liberal அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்களை முன்வைத்துள்ளனர். இதற்கிடையில் Liberal கட்சி ஆதரவாளர்களில் 14 சதவீதம் பேர் மட்டுமே அடுத்த தேர்தலை புதிய ஆண்டை விட விரைவில் நடத்த விரும்புகிறார்கள். அத்தோடு ஒட்டுமொத்தமாக 52% கனேடியர்கள் முன்கூட்டிய தேர்தலை விரும்புவதாக Angus Reid கருத்துகணிப்பு தெரிவிக்கின்றது.

Related posts

சர்வதேச மாணவர்கள் அனுமதி தொடர்பில் கனடா குடிவரவு அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

Editor

இந்த வருடத்திற்கான நிதிப்பற்றாக்குறை 23.6 பில்லியன் டாலராக இருக்கும் ; கனேடிய நிதியமைச்சர்

Editor

தற்காலிக தொழிலாளர்களுக்கு open work permits அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசை NDP வலியுறுத்தல்

admin