கனடா செய்திகள்

நிரந்தர வதிவிடத்திற்கான பாதையை வழங்கும் இரண்டு முக்கிய மூலங்களை Quebec முடக்குகிறது

Quebec மாகாணத்தில் குடியேறும் புதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மொழி மற்றும் கலாச்சார அச்சுறுத்தல்களை மேற்கோள் காட்டி நிரந்தர வதிவிடத்திற்கான பாதையை வழங்கும் இரண்டு முக்கிய குடியேற்ற மூலங்களை அரசாங்கம் முடக்கியுள்ளது.

மாகாண அரசாங்கம் 2025 ஆம் ஆண்டில் 67,000 குடியேறியவர்களை வரவேற்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கு கணிக்கப்பட்டதை விட அதிகமாகும்.இதே சமயத்தில் இத் தடை உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது. இம் முடக்கம் ஜூன் 2025 வரை நீடிக்கும் எனவும், அப்போதுதான் மாகாணம் 2026 ஆம் ஆண்டிற்கான குடியேற்ற உத்தியை உருவாக்கும் எனவும் குடிவரவு அமைச்சர் Jean-François Roberge தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் மாகாணத்தில் 67,000 பேர் வருவார்கள் என்று திட்டமிடுகிறது. 2023 இல் சுமார் 52,800 குடியேறியவர்கள் இருந்தனர் மற்றும் மாகாணம் 2024 இல் 61,450 வரை வரவேற்க திட்டமிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டிற்கான புதியவர்களின் அதிகரிப்பு இருந்தபோதிலும், கடந்த ஆண்டுகளை விட அவர்களில் அதிக சதவீதமானோர் பிரெஞ்சு மொழி பேசுவார்களாக காணப்படுவதாக Roberge கூறுகிறார். மேலும் 2025 ஒரு விதிவிலக்கான ஆண்டாக இருக்கும், முதல் முறையாக, பிரெஞ்சு மொழி தெரிந்த புலம்பெயர்ந்தோரின் விகிதம் சுமார் 80 சதவீதமாக இருக்கும் என இவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்தோடு அவர்கள் பிரெஞ்சு மொழியை அறிந்திருப்பதால், 67,000 பேர் வரை வரவேற்பது Quebec இன் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்காது எனவும் கூறினார்.

Quebec அரசாங்கம் அக்டோபரில் மாகாணத்தில் உள்ள சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த சட்டங்களை அறிமுகப்படுத்தியதுடன், ஆகஸ்ட் மாதத்தில் Montreal இல் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான சில விண்ணப்பங்களுக்கு மாகாணம் ஆறு மாத தடை விதித்தது.

மாகாணத்தில் தற்காலிகமாக குடியேறியவர்களான வெளிநாட்டு தொழிலாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் அகதிகள் கோரிக்கையாளர்கள் ஜனவரி 2024 இல் 560,000 ஐத் தாண்டியுள்ளனர். கனடாவின் புகலிடக் கோரிக்கையாளர்களில் 54 சதவீதத்தை Quebec பெறுவதாகவும் Quebec’s statistics agency கூறுகிறது.

Related posts

குழந்தைகளுக்கான RSV க்கு எதிரான உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தை NACI பரிந்துரைப்பு

admin

பெரும்பாலான Liberal பாராளுமன்ற உறுப்பினர்கள் Trudeau ஐ தலைவராக ஆதரிக்கின்றனர்: – Freeland

Canadatamilnews

பெரும்பான்மையான Liberal எம்.பி.க்கள் பிரதமர் Justin Trudeau கே ஆதரவு : Chrystia Freeland

Canadatamilnews