கனடா செய்திகள்

parent மற்றும் grandparent இற்கான permanent residency sponsorships விண்ணப்பங்களை கனடா இடைநிறுத்துகிறது

கனடா புதிய parent மற்றும் grandparent இற்கான நிரந்தர வதிவிட sponsorships விண்ணப்பங்களை மறு அறிவிப்பு வரும் வரை ஏற்க மாட்டோம் என்று அமைச்சக உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. குடிவரவு அமைச்சர் Marc Miller இந்த உத்தரவு அரசாங்கத்தின் குடியேற்றம் மற்றும் குடும்ப மறு ஒருங்கிணைப்பு இலக்குகளை சிறப்பாக ஆதரிக்கும் என்று நம்புகிறார்.

அரசாங்கத்தின் குடியேற்ற நிலைகளின் திட்டமானது இந்த ஆண்டு parent மற்றும் grandparent stream மூலம் 24,000 க்கும் மேற்பட்டவர்களை அனுமதிப்பதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் குடியேற்றத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் 2024ல் குடும்ப மறு இணைப்பு திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 15,000 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று புதிய உத்தரவு கூறுகிறது.

2024 ஆம் ஆண்டில் parent and grandparent program இன் படி 20,500 விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 35,700 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அழைக்கப்பட்டனர். மேலும் அவ் அறிக்கையானது sponsorship விண்ணப்பத்திற்கான சராசரி செயலாக்க நேரம் 24 மாதங்கள் என்று தெரிவிக்கின்றது.

Related posts

கனேடியப் பெண் ஒருவர் ஆழ்கடலில் புகைப்படம் எடுத்து “உலக சாதனை” படைத்துள்ளார்.

Editor

Ottawa உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாத புதியவர்களுக்கான பாதையை உருவாக்குகிறது

admin

இலங்கையை சேர்ந்த 6 பேர் Berrhaven நகரில் சடலமாக மீட்பு;

Editor