கனடா செய்திகள்

திங்கட்கிழமை முதல் கடிதம் அனுப்புவதற்கான செலவு 25% அதிகரிக்கவுள்ளது

திங்கட்கிழமை முதல் கடிதமொன்றை அஞ்சல் செய்வதற்கான செலவு 25% அதிகரிக்கவுள்ளது. கனேடியர்களுக்கு கடித அஞ்சல் சேவையை வழங்குவதற்கான வளர்ந்து வரும் செலவினங்களைத் தொடர முத்திரையின் விலையில் ஏறக்குறைய 25% உயர்வு அவசியம் என்று  crown corporation கூறுகிறது.

சிறு booklet, coil அல்லது pane இற்கான முத்திரை விலைகள் 25 சென்ட்கள் அதிகரித்து $1.24 ஆகவும், தனிப்பட்ட முத்திரைகள் $1.15ல் இருந்து $1.44 ஆகவும் உயரும். இது குடும்பச் செலவுகளை $2.26 ஆகவும், சிறு வணிகச் செலவுகளை ஆண்டுதோறும் $42.17 ஆகவும் அதிகரிக்கும். மேலும் இப் புதிய விகிதங்கள் 2025 ஆம் ஆண்டில் Canada Post இற்கு சுமார் $80 மில்லியன் கூடுதல் வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களில் கடித அஞ்சல் அளவுகள் 2006 இல் 5.5 பில்லியன் இலிருந்து 2023 இல் 2.2 பில்லியன் கடிதங்களாக 60% குறைந்துள்ளதாக Canada Post தரவுகள் குறிப்பிடுகின்றன.

Related posts

இத்தாலிக்கான பயணத்தின் போது பல தலைவர்களை சந்திக்கும் கனேடியப் பிரதமர்.

canadanews

Montréal நகரசபை உறுப்பினராக இலங்கையை பின்புலமாக கொண்ட தமிழர் தெரிவு.

canadanews

கனடாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை வெல்லும் முயற்சியாக South Korea தூதுக்குழு கனடா பயணம்.

canadanews