கனடா செய்திகள்

நேரமின்மை காரணமாக Liberal தலைமைக்கு போட்டியிட போவதில்லை என MacKinnon தெரிவிப்பு

Liberal தலைமைக்கு போட்டியிடுவது பற்றி பரிசீலித்து வருவதாக வதந்தி பரவிய மற்றொரு அமைச்சரான Steven MacKinnon, அவர் விரும்பும் பிரச்சாரத்தை மேற்கொள்ள அவருக்கு போதுமான நேரம் இல்லாத காரணத்தினால் Liberal தலைமைக்கு போட்டியிட போவதில்லை எனக் கூறியுள்ளார்.

புதிய தலைவர் மார்ச் 9 ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என்று Liberal கட்சி தெரிவித்துள்ளது, இதனால் வருங்கால வேட்பாளர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கவும், கட்சி உறுப்பினர்களை வாக்களிக்க பதிவு செய்யவும் எட்டு வாரங்கள் மட்டுமே உள்ளன.

தலைமைத்துவத்தைத் தேடுவார்கள் என்று ஊகிக்கப்பட்ட Trudeau இன் அமைச்சரவையில் உள்ள மற்ற உயர்மட்ட அமைச்சர்கள் சமீபத்திய நாட்களில் இந்த யோசனையை நிராகரித்துள்ளனர். குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் Melanie Joly, கனடா-அமெரிக்க உறவுகளுக்கு முக்கியமான நேரத்தில் தனது அமைச்சரவை பதவியை ராஜினாமா செய்ய விரும்பவில்லை என்றும் Liberal தலைமைக்கு போட்டியிட போவதில்லை என்றும் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். மற்றும் Transport and Internal Trade அமைச்சர் Anita Anand மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சனிக்கிழமை அறிவித்தார்.



Related posts

Bank of Canada பணவீக்கத்தை 2% ஆக வைத்திருப்பதற்காக, அரை சதவீத புள்ளி விகிதக் குறைப்பை வழங்குகிறது

admin

கனடாவின் Haiti airlift ஆனது குடியிருப்புக்கள், உறவினர்கள் மற்றும் charter flight வசதிகளை கொண்டதாக விரிவாக்கப்படுகின்றது

admin

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான மாற்றங்கள் Ottawa இனால் மேற்கொள்ளப்படுகின்றது

admin