கனடா செய்திகள்

February 01 முதல் கனடா இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் – Donald Trump

கனடா மீது 25 சதவீத வரிகள் அமுல்படுத்துவதற்கு சாத்தியமான திகதியை அமெரிக்க அதிபர் Trump வழங்கியுள்ளார். திங்கட்கிழமை Oval அலுவலகத்தில் வைத்து ​​வரிகள் எப்போது அமுல்படுத்தப்படும் என்று அவரிடம் கேட்டபோது அதற்கு February 1 என்று நினைக்கிறேன் என பதிலளித்தார்.

Canada மற்றும் Mexico மீது 25 சதவீத அடிப்படையில் நாங்கள் சிந்திக்கிறோம், ஏனெனில் அவர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்களை உள்ளே வர அனுமதிக்கின்றனர். என்று செய்தியாளர்களிடம் கூறினார் Trump.

நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, பதவியேற்பு நாளில் Canada மற்றும் Mexico நாடுகளை 25 சதவீத வரிகளால் கடுமையாகத் தாக்குவதாக Trump அச்சுறுத்தியிருந்த போதும் தனது பதவியேற்பு நாளில் கனடாவைப் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாக்க எங்கள் வர்த்தக அமைப்பின் மறுசீரமைப்பை உடனடியாகத் தொடங்குவேன் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி மற்ற நாடுகளை வளப்படுத்த எங்கள் குடிமக்களுக்கு வரி விதிப்பதற்குப் பதிலாக, எங்கள் குடிமக்களை வளப்படுத்த வெளிநாடுகளுக்கு வரி விதிப்போம் என்றார்.

மேலும் கனடாவுடன் அமெரிக்கா கொண்டிருக்கும் வர்த்தக பற்றாக்குறை குறித்தும் அவர் தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார். இதனிடையே Trump இன் அச்சுறுத்தப்பட்ட வரிகளுக்கு அமெரிக்கர்களிடையே குறைந்த பட்ச ஆதரவே இருப்பதாக ஒரு புதிய கருத்துக்கணிப்பும் தெரிவிக்கிறது.

Related posts

பல் மருத்துவர்களை அதிகரிக்கும் வகையில் பல் பராமரிப்பு மாற்றங்களை செய்ய வேண்டும் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

admin

முன்னாள் பிரதமர் Brian Mulroney க்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி

admin

ஆப்பிரிக்காவில் பரவி வரும் mpox பரவலைத் தடுக்க கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும்

admin