கனடா செய்திகள்

December மாதத்திற்கான வருடாந்த பணவீக்க அளவீடு 1.8%

December இல் பணவீக்கம்1.8 % ஆகக் குறைந்துள்ளதால், பொருளாதார வல்லுநர்கள் மேலும் BoC விகிதக் குறைப்புகளை எதிர்பார்க்கிறார்கள்.

Ottawa வின் தற்காலிக GST வரிச் சலுகை காரணமாக, கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் December இல் குறைந்தது, ஆனால் வட்டி விகிதக் குறைப்புக்கள் இன்னும் அடிமட்டத்திலேயே இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

November இல் 1.9 சதவீதமாக இருந்த பணவீக்கம் செவ்வாயன்று December மாதத்திற்கான வருடாந்த பணவீக்க அளவீடு 1.8 சதவீதமாக குறைந்ததாக கனடா புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உணவகங்களில் இருந்து வாங்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் கடைகளில் இருந்து வாங்கப்படும் மதுபானம் ஆகியவை வரி விலக்குக்கு உட்பட்ட பொருட்கள். மேலும் குழந்தைகளின் உடைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவை இந்த வீழ்ச்சிக்கு அதிகம் பங்களித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடா வங்கி அடுத்த வாரம் வட்டி விகித முடிவை எடுக்கவுள்ள நிலையில் அனைவரின் கவனமும் இப்போது கனடா வங்கியின் பக்கம் திரும்பியுள்ளது. பல பொருளாதார வல்லுநர்கள் December இன் புள்ளிக் குறைப்பைத் தொடர்ந்து, மீண்டும் அடுத்த காலாண்டிற்கான குறைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன் 25 சதவீத கட்டணங்கள் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தல் மத்திய வங்கியின் முடிவைப் பாதிக்கும் என்று Porter கூறினார்.

2025 ஆம் ஆண்டின் ஒவ்வொரு முடிவின் போதும் கால் சதவீத புள்ளிக்குறைப்பு எதிர்பார்க்கப்படுவதாக TD Economics மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இவை அனைத்தும் கனடாவின் விலை அழுத்தங்கள் மேலும் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் குருட்டு நம்பிக்கைகளை கடந்து வெளிப்படைத்தன்மை பேண வேண்டும் என்கிறார் – Poilievre.

canadanews

உற்பத்தி விற்பனை அதிகரிப்பால் May மாதத்திற்கான மொத்த வர்த்தகம் வீழ்ச்சி – Statistics Canada

admin

நாடு முழுவதும் போதைக்கு அடிமையானவர்களுக்கு கட்டாய சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் இல்லை – அமைச்சர் தெரிவிப்பு

admin