கனடா செய்திகள்

Trump இன் வரிகளுக்கு பதிலளிக்க எல்லாம் மேசையில் உள்ளது – பிரதமர் Trudeau

அமெரிக்காவிற்கு ஒரு பொற்காலத்தை ஏற்படுத்த ஜனாதிபதி Donald Trump விரும்பினால், Canada வழங்கத் தயாராக இருக்கும் ஆற்றல், முக்கியமான கனிமங்கள் மற்றும் வளங்கள் அவருக்குத் தேவைப்படும் என்று பிரதமர் Justin Trudeau செவ்வாயன்று கூறினார்.

கனேடிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரிகளை விதிக்கப்போவதாக Trump கூறிய பின்னர் முதன்முதலாக பொதுவெளில் கருத்துரைத்த Trudeau நாங்கள் அமெரிக்காவுக்கு ஆக்கபூர்வமான கூட்டாளிகளாக இருக்கிறோம், என்று கூறினார்.

Canada – America வர்த்தக உத்தி பின்தங்குவதை மையமாகக் கொண்டு Quebec இன் Montebello கூட்டாட்சி அமைச்சரவை கூடுகிறது.

Canada மற்றும் Mexico நாடுகள் ஏராளமான மக்களை அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதால் 25 சதவீத வரியை விதிக்க முடிவெடுத்ததாக அமெரிக்க ஜனாதிபதி கூறிவருகின்றார்.

இந்நிலையில் Trump நிர்வாகத்தில் Canada இதற்கு முன்பும் இந்த சூழ்நிலையில் இருந்ததாக கூறும் கனேடிய பிரதமர், கனேடிய அரசாங்கம் குறித்த வரியை தவிர்ப்பதற்காகவே முயற்சித்து வருவதாகவும் அது பலனளிக்கவில்லை என்றால் கனடா வலுவான பதிலை வழங்கும் என்றும், பதிலளிப்பதற்கு எல்லாம் மேசையில் உள்ளதாகவும் கூறினார்.

Related posts

இஸ்ரேலும் கமாசும் நிலையான போர் நிறுத்தத்தை நோக்கி செயல்பட வேண்டும் என கனடிய பிரதமர் “Justin Trudeau” வலியுறுத்தினார்.

Editor

பிரான்ஸ் அதிபர் Macron கனடாவுக்கு வருகை தந்துள்ள நிலையில் Trudeau இனை சந்திக்கவுள்ளார்

admin

Trump பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை தொடர்ந்து ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கனேடியத் தலைவர்கள் தெரிவிப்பு

admin