கனடா செய்திகள்

Ontario வில் அடுத்த வார தொடக்கத்தில் திடீர் தேர்தலை அறிவிக்க வாய்ப்பு

Ontario இல் முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மாகாண முதல்வர் Doug Ford January 29 அல்லது February 05 ஆம் தேதி தேர்தலை அறிவிப்பார் என்று 680 NewsRadio வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த வாரம் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளீர்களா என்று புதன்கிழமை நேரடியாக அவரிடம் கேட்டபோது, ​​காத்திருங்கள் என்று Ford பதிலளித்திருந்தார்.

சனிக்கிழமை அனைத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் “Super caucus meeting” இற்கு அழைப்பு விடுத்துள்ளதாக 680 NewsRadio வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சியான NDP தலைவர் Marit Stiles கூறுகையில், ஏற்கெனவே Ford இற்கு பெரும்பான்மை இருப்பதாக சுட்டிக்காட்டி, மேலதிகமாக ஒரு ஆணை அவருக்கு தேவையில்லை என்று கூறுகிறார்.

இதனிடையே, வெப்ப காலமோ அல்லது குளிர் காலமோ, வெயில் காலமோ அல்லது பனி காலமோ முதல்வர் கூறினால் எப்போதும் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராகவே இருக்கிறேன், என்று Ontario இன் பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வர்த்தக அமைச்சர் Vic Fideli கூறியுள்ளார்.

Related posts

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களால் எந்த நாட்டிற்கும் ஆதாயம் இல்லை – G7 வெளியுறவு அமைச்சர்கள் தெரிவிப்பு

admin

மாகாண கார் திருட்டுப் பணிக்குழுவினால் 124 பேரைக் கைது – 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள 177 திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

admin

Toronto இலிருந்து Mumbai க்கு இடைநில்லா விமானங்களை வழங்குவதற்கான சேவையை Air Canada விரிவுபடுத்துகின்றது

admin