எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டணியான OPEC+ எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன் அழுத்தம் அமெரிக்காவை எரிசக்தி ஆதிக்க நாடாக மாற்றுவதற்கான குடியரசுக் கட்சித் தலைவரின் சொந்தத் திட்டங்களுடன் முரண்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
வியாழக்கிழமை சுவிட்சர்லாந்தின் Davos நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் ஆற்றிய பரந்த உரையில் Trump இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றினால், வரி குறைப்புகளுக்கு உறுதியளித்த Trump அவ்வாறு செய்யாவிட்டால் கட்டணங்கள் விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தினார்.
வெள்ளை மாளிகையில் இருந்து Trump வீடியோ இணைப்பு மூலம் சவுதி அரேபியா மற்றும் OPEC அமைப்பிடம் விலையைக் குறைக்க கோரப்போவதாக மேலும் கூறினார்.
எண்ணெய் விலைகள் குறைந்தால் வட்டி விகிதங்களும் குறைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகின்றார்.
கனடாவின் இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரிகளை விதிப்பதாக கூறிய Trump, கனடா அமெரிக்கவின் ஒரு மாநிலமாக மாறினால் எந்த வரிகளும் இருக்காது என்றும் கூறினார். அத்துடன் அமெரிக்காவிற்கு கனேடிய எரிசக்தி தேவையில்லை எனவும் வியாழக்கிழமை தனது உரையில் மீளவும் வலியுறுத்தினார்.
இருப்பினும், அமெரிக்கவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 60 சதவீதம் கனடாவிலிருதே வருகிறது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அதாவது அமெரிக்கா ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் எண்ணெயில் கிட்டத்தட்ட கால் பங்கு வடக்கு எல்லையிலிருந்தே பெறப்படுகிறது.