கனடா செய்திகள்

[எதிர்வரும் புதன்கிழமை மாகாணத் தேர்தல் அறிவிப்பை வெளியிடப்போகும் Doug Ford

ஒன்ராறியோ முதல்வர் Doug Ford புதன்கிழமை மாகாணத் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஒன்ராறியோ மக்கள் February 27 அன்று வாக்களிக்க உள்ளதாகவும் 680 NewsRadio வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அமெரிக்க அதிபரின் வரிவிதிப்பு அச்சுறுத்தலைக் காரணம்காட்டி ஒன்ராறியோ மக்களை முன்கூட்டியே வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப Ford திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி சனிக்கிழமை அனைத்து கன்சர்வேடிவ் கட்சி மாகாண உறுப்பினர்களுக்கும் முதல்வர் ஒரு “super caucus meeting” இற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் முன்கூட்டிய தேர்தல் எதிர்வுகூறப்படுகின்றது.

இதனிடையே, எதிர்க்கட்சியான NDP அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலை மையமாகக்கொண்டு முதல்வர் Ford மக்கள் விரும்பாத போதிலும் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடுவதாக குற்றம்சாட்டி வருகிறது.

Related posts

உலகளாவிய குறியீட்டில் Toronto வீட்டுவசதியின் நிலவரம்.

canadanews

Trudeau போர்நிறுத்த அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறார், ஆனால் இஸ்ரேல் Lebanon இற்கு படைகளை அனுப்புவதை கண்டிக்கவில்லை

admin

வளர்ச்சி ஏழு சதவீதமாகக் குறைந்துள்ளதால் June மாதத்திற்கு கேட்கும் வாடகை $2,185ஐ எட்டியது

admin