கனடா செய்திகள்

தலிபான்களின் பிடியிலிருந்து விடுபட்ட கனேடிய ஆயுதப்படை வீரர்

கடந்த நவம்பர் மாதம் ஆப்கானின் தலைநகர் Kabul இல் காணாமல் போனதாக கூறப்பட்ட கனேடிய ஆயுதப்படைவீரரான David Lavery என்பவர் Qatar அரசாங்கத்தின் உதவியுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து Qatar க்கு பாதுகாப்பான முறையில் வந்து சேர்ந்ததாக கனேடிய வெளியுறவுத் துறை அமைச்சர் Melanie Joly கூறினார்.

ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் குழுவுடன் இணைந்து பணியாற்றி வந்த நிலையிலேயே Lavery காணாமல் போயிருந்தார்.

ஆப்கானிஸ்தான் 2021 முதல் தாலிபான்களின் ஆட்சியின் கீழ் உள்ள நிலையில் Lavery ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக படைவீரர் மாற்ற வலையமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

Related posts

Toronto Pearson விமான நிலைய screeners இன் வேலைநிறுத்தத்தைத் தவிர்க்க தற்காலிக ஒப்பந்தம் கிடைக்கப்பெற்றது

admin

‘புகலிடம் கோருவது எளிதானது அல்ல’: கனடா அகதிகளை global ad campaign இல் எச்சரிப்பு

admin

கனடா தினத்தில் பிரதமர் Justin Trudeau தெரிவித்த செய்தி

admin