கனடா செய்திகள்

கனடாவின் வாடகை கொடுப்பனவுகளின் நிலைமாறுதல்

கனடாவில் வாடகைக் கொடுப்பனவுகள் COVID-19 தொற்றுநோய்க்குப் பின்னர் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றமை வாடகைதாரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

2021 ஆம் ஆண்டில் ஒரு வாடகை அலகில் சராசரி 4.6 சதவீதம் அதிகரிப்பு பதிவாகியது, 2022 இல் இது 12.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக Rentals.ca மற்றும் Urbanation தரவுகள் தெரிவிக்கின்றன. பின்னர் 2023 ஆம் ஆண்டில், வாடகை கேட்பது சராசரியாக 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் வாடகை சந்தையில் அண்மைய ஆண்டில் நிலவிய அதிகரிப்பு தொடர வாய்ப்பில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக சிலர் தங்கள் முதல் வீட்டை வாங்க விரும்புகிறார்கள்.

இந்த சரிவிற்கு வல்லுநர்கள் பல காரணிகளை சுட்டிக்காட்டுகின்றனர். தேவை குறைந்துள்ளதுடன், புதிய வாடகை தேடும் மக்கள் தொகையின் வீழ்ச்சி மற்றும் பெற்றோரின் வீட்டை விட்டு வாடகைக்கு குடிபெயரும் இளையோர் குறைவாக இருத்தல் போன்ற காரணங்களால் வாடகை வளர்ச்சி இந்த ஆண்டு மூன்று முதல் நான்கு சதவீதம் வரை குறையும் என்று கணித்துள்ளார்.

இதற்கிடையில், கனடாவின் வாடகை நோக்கத்திற்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் விநியோகம் ஒவ்வொரு வருடமும் 4.1 சதவீதம் வளர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் மெதுவான மக்கள்தொகை வளர்ச்சியை சாதகமாக கொண்டு கட்டுமானத்துறையில் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஒரு பொன்னான வாய்ப்பாக பயன்படுத்தி வீடமைப்பு துறையை விரைவுபடுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என துறைசார்ந்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

இஸ்ரேலும் கமாசும் நிலையான போர் நிறுத்தத்தை நோக்கி செயல்பட வேண்டும் என கனடிய பிரதமர் “Justin Trudeau” வலியுறுத்தினார்.

Editor

குறிப்பாக கிழக்கு உட்பட நாடு முழுவதும் கோடை வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது

admin

இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது, ஆனால் பரந்த போர் தவிர்க்கப்பட வேண்டும்: Trudeau

admin