கனடா செய்திகள்

Bank of Canada இடமிருந்து விகிதக்குறைப்பை எதிர்பார்த்தாலும் அதன் வேகம் குறைவாகவே இருக்க வேண்டும்!

அண்மைய பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு தரவுகளின் அடிப்படையில் Bank of Canada பிரதான கொள்கை விகிதத்தை கால் சதவீத புள்ளியால் குறைத்து மூன்று சதவீதமாக பேணும் என பொருளாதார கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் தற்காலிக GST வரிச் சலுகையின் அடிப்படையில் கனடாவின் ஆண்டு பணவீக்க விகிதம் December இல் 1.8 சதவீதமாகக் குறைந்தது. பணவீக்கம் குறைந்து செல்வது கனடாவைப் பொறுத்தவரையில் ஒரு ஆரோக்கியமான அறிகுறி என RSM கனடாவின் பொருளாதார நிபுணர் Nguyen கூறினார்.

கனடாவின் பணவீக்கம் மீண்டும் உயர்வதற்கான சாத்தியம் குறைவாகவே காணப்படுகின்ற அதேவேளை வரிச்சலுகை இல்லா விட்டால் வருடாந்த பணவீக்க விகிதம் 2.3 சதவீதமாக உயர்ந்திருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன் 25 சதவீத வரி அச்சுறுத்தல் கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீத வீழ்சியை ஏற்படுத்தி மந்தநிலையை மேலும் தூண்டும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

கனேடிய பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையில் காணப்படும் நிலையில் வங்கி வெட்டுக்களின் வேகத்தை குறைப்பது பாதுகாப்பானது என கூறும் Nguyen புத்திசாலித்தனமான செயற்பாடும் அதுதான் என்கிறார். இதேவேளை கனடாவின் வேலையின்மை வீதமும் சற்று குறைந்து செல்வதுடன் பணவீக்கமும் வங்கி எதிர்பார்த்த இலக்கை நெருங்கியிருப்பது கனடாவின் பொருளாதார நிலை குறித்த முன்னேற்றத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.

Related posts

Newfoundland மற்றும் Labrador இனை தாக்கிய புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களிற்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது

admin

2025 இல் Housing market மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

admin

பெண்களுக்கான 200m butterfly போட்டியில் கனடா வீராங்கனை McIntosh தங்கம் வென்றார்

admin