கனடா செய்திகள்

[February 01ஆந் திகதி முதல் வரி விதிக்கப்படும் என்ற காலக்கெடு இன்னும் நிலுவையில் உள்ளது என்கிறார் Trump இன் ஊடகச் செயலாளர்.]

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய Donald Trump இன் ஊடகச் செயலாளர் கனடா மற்றும் மெக்ஸிக்கோ நாடுகளுக்கு எதிரான வரி வதிப்பு திட்டம் இன்னும் செயற்பாட்டில் இருப்பதாக கூறினார்.

கனடாவின் 1.3 பில்லியன் Dollars எல்லைப் பாதுகாப்புத் திட்டத்தை ஊக்குவித்தும், வரிகள் இருநாட்டு பொருளாதாரங்களையும் பாதிக்கும் என்றும் அண்மைய நாட்களாக கனேடிய அதிகாரிகள் வாதிட்டு வருகின்றனர்.

Donald Trump இன் வரிகளால் பாதிக்கப்பட்ட வர்த்தகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு நிவாரண திட்டமொன்றை பரிசீலித்து வருகின்ற நிலையில், Ottawa இது தொடர்பில் என்ன திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பாராளுமன்றம் கூடுகின்ற முதல் சந்தர்பத்திலேயே சிறுபான்மை லிபரல் அரசாங்கத்தை வீழ்த்தப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறிவரும் நிலையில் அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் கனடாவின் உள்நாட்டு அரசியல் குழப்பநிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே பல மாகாண முதல்வர்கள் தொற்றுநோய் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்ற நிவாரணத் திட்டங்களை பரிசீலித்து வருவதாக கூறியுள்ளனர்.

கனடாவுடனான வர்த்தகம் குறித்த அறிக்கையை April 01 ஆந் திகதி வரை சமர்ப்பிக்கக் கூடாது என்று Trump இன் உத்தரவு கூறுகின்ற போதிலும், அவர் தனது வரி அச்சுறுத்தலில் இருந்து சற்றும் பின்வாங்கவில்லை என்பதுடன் வரிகள் February 01 ஆந் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று பலமுறை பரிந்துரைத்துள்ளார்.

Related posts

கனடா பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க தயாராகிறது

canadanews

heat dome அல்லது Heat wave?

admin

Bank of Canada இம்முறை வட்டி விகிதக் குறைப்புகளை நிறுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

canadanews