கனடா செய்திகள்

Ontario மாகாணத் தேர்தலை அதிகாரபூர்வமாக அறிவித்தார் முதல்வர் Doug Ford.

February 27 ஆந் திகதி மாகாணத் தேர்தலை நடத்துவதாக Ontario மாகாண முதல்வர் Doug Ford அதிகாரப்பூர்வமாக நிர்ணயித்துள்ளார். ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் திகதிக்கு ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் இருக்கும் நிலையில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே June 2026 இல் தேர்தல் திட்டமிடப்பட்டிருந்தது, எனினும் அமெரிக்காவில் Donald Trump ஜனாதிபதியாக நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதை எதிர்கொள்வதற்கு ஏதுவாக தனக்கும் புதிய ஆணை தேவை என Ford கடந்த வாரம் கூறியிருந்தார்.

இந்நிலையில், மாகாண சபையை நேற்று மாலை 4 மணியுடன் கலைப்பதற்காக முதல்வர் ஆளுநரைச் சந்தித்ததுடன், மாகாணத்தின் 124 தேர்தல் மாவட்டங்களிலும் தேர்தல்களை நடத்தும் உத்தரவும் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளன.

Related posts

Oshawa உணவகத்தின் முன்னாள் manager மீது ஊழியர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு

admin

மலிவு விலையில் வீடுகள் இல்லாமையினால் Ontarioவின் நிதியுதவியை நிறுத்தி வைப்பதாக மத்திய வங்கிகள் அச்சுறுத்தல்

admin

Christmas இன் போது Wayne Gretzky இனை பிரதமர் பதவிக்கு போட்டியிடுமாறு Donald Trump கேட்டுக்கொண்டார்

admin