கனடா செய்திகள்

Bank of Canada வின் 3% சதவீத வட்டி விகிதக் குறைப்பை மேற்கொண்டுள்ளது.

புதன்கிழமை Bank of Canada மற்றொரு வட்டி விகிதக் குறைப்பை மேற்கொண்டு அதன் கொள்கை விகிதத்தை மூன்று சதவீதமாக்கியுள்ளது. கனடாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையில் மத்திய வங்கி
June மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஆறாவது முறையாக இந்த வட்டி விகிதக் குறைப்பை மேற்கொண்டுள்ளது.

கடந்த கால வட்டி விகிதக் குறைப்புகள் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திக்கொண்டிருப்பதால் கனடாவின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடையும் சாத்தியமுள்ளதாக Bank of Canada ஆளுநர் Tiff Macklem கூறினார்.

ஆனாலும் அமெரிக்காவின் வரிகள் தொடர்ந்தும் கனடாவின் பொருளாதார வளர்ச்சியை பாதித்துக்கொண்டிருக்கின்றது. Bank of Canada புதன்கிழமை வெளியிட்ட அதன் நாணயக் கொள்கையில், கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணிப்பை கடந்த ஆண்டுகளை விட இம்முறை குறைத்துள்ளது.

மக்கள்தொகையின் வளர்ச்சியில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் மத்திய அரசின் குடியேற்ற கொள்கைகள் போன்ற காரணங்களும் கனடாவின் வணிக முதலீட்டில் சரிவை ஏற்படுத்தி வருகின்றன.

பழிவாங்கும் நடவடிக்கைகளின் நோக்கம் அல்லது எவ்வாறான நிதி ஆதரவுகள் வழங்கப்படும் என்பது தங்களுக்குத் தெரியாது என்று கூறும் ஆளுநர் Macklem என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி எங்கள் அனுபவங்களைக் கொண்டு தீர்மானித்தாலும், பொருளாதார தாக்கங்கள் குறித்து துல்லியமாக கூறுவது கடினமாகவே இருக்கும் என்றார்.

Related posts

Stanley Cup Game 7 இற்காக 15 மில்லியன் கனேடியர்கள் இணைந்துள்ளனர் – அதிகம் பார்க்கப்பட்ட Sportsnet ஒளிபரப்பாக பதிவு

admin

Navalny இன் சிறைவாசம் மற்றும் மரணத்தில் பங்கு வகித்த மேலும் 13 ரஷ்யர்களிற்கு கனடா தடை விதிப்பு

admin

June 27 அன்று நடைபெறவுள்ள தேசிய பல் பராமரிப்புக்கு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் தகுதி உடையவர்கள்

admin