கனடா செய்திகள்

பரஸ்பர வரிவிதிப்புக்களால் பாதிக்கப்படும் கனேடிய – அமெரிக்க மதூபான வர்த்தகம்

கனேடிய மாகாணங்களின் மதுபானக் கடைகளில் இருந்து அமெரிக்க மதுபானங்களை அகற்றுவதற்கான பல மாகாணங்களின் முடிவுகளுக்கு கனேடிய மதுபான உற்பத்தியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இந்த நடவடிக்கை உள்நாட்டு வணிகத்திற்கு ஊக்கத்தை அளிக்கும் அதே நேரம் அமெரிக்கா வரிகளிலிருந்து பின்வாங்குவதற்கும் வழிவகுக்கும் என்று கூறுகின்றார்கள்.

Trump உத்தரவின் படி வரிகள் நடைமுறைக்கு வரும் இன்றைய தினம் அமெரிக்காவின் 35 மாநிலங்களில் இருந்து 3,600 இற்கும் மேற்பட்ட மதுபான உற்பத்திகள் மதுபான நிலையங்களை விட்டு வெளியேற உள்ளன.

கனேடிய தயாரிப்புக்களை ஊக்குவிப்பதற்காக இது ஓர் நல்ல தருணம் என்றும் இதற்கு தாம் ஆதரவளிப்பதாகவும் கனேடிய மாநிலங்களான Ontario, British Columbia, Quebec, Manitoba, Nova Scotia, Newfoundland மற்றும் Labrador ஆகியன தெரிவித்துள்ளன.

செவ்வாய்க்கிழமை முதல் கனேடியப் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் Trump கையெழுத்திட்டபோது சனிக்கிழமை வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் மதுபானம் பிரதானமான பேசு பொருளாக விளங்கியதுடன் அவர் கனேடிய எரிசக்திக்கு ஓர் சிறிய வரிச்சலுகையும் வழங்கினார்.

கனடா விதித்துள்ள வரிகளின் பட்டியலில் Malta நாட்டின் beer உள்ளிட்ட தயாரிப்புகளும் அடங்குவதுடன் fresh grapes மற்றும் vermouth ஆகியவற்றால் தயாரிக்கப்படும் பல வயின்கள் ஏனைய மதுபானங்களான whiskies, tequilas, vodkas, gins மற்றும் rums ஆகியவைகளும் அடங்கும்.

கனடாவை விட அமெரிக்காவே அதிகம் கனடாவின் மதுபானத்தில் தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள கனேடிய உள்ளூர் உற்பத்தியாளர்கள் அமெரிக்காவுக்கு ஒரு செய்தியை சொல்வதற்கு கனடா மதுபானத்தை பயன்படுத்துவது இது முதல்முறையல்ல என்பதையும் தெரிவித்துள்ளனர்.

Related posts

Copa América semifinal இல் Argentina 2-0 என்ற வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தியது

admin

2020 இல் நடந்த மோசடியான Belarus தேர்தலின் ஆண்டு நிறைவையொட்டி கனடா அபராதம் விதிப்பு

admin

கனடாவில் உள்ள சீக்கிய ஆர்வலர்களை மீது தாக்குதல் நடத்த உள்துறை அமைச்சர் உத்தரவிட்டதாக Ottawa இன் குற்றச்சாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது

admin