கனடா செய்திகள்

லிபரல் மற்றும் NDP கட்சிகளை விட வலுவான நிதி திரட்டலுடன் பொதுத் தேர்தலுக்கு தயாராகும் கன்சர்வேட்டிவ் கட்சி

2024 ஆம் ஆண்டில் கன்சர்வேட்டிவ் கட்சி சிறந்த நிதி ஸ்திரத்தன்மையை கொண்டிருந்தது. அப்போது லிபரல் மற்றும் NDP ஆகிய கட்சிகள் இணைந்து திரட்டிய மொத்த நிதியை விட இரண்டு அது மடங்கு தொகையாக இருந்தது.

Elections Canada வின் தகவலின் படி 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் கன்சர்வேட்டிவ்கள் கிட்டத்தட்ட $12.8 மில்லியனை ஈட்டினர். இந்த தொகையில் $7.6 மில்லியன் டிசம்பரில் மட்டும் திரட்டப்பட்டதாக கட்சி தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு மூன்று பிரதான தேசியக் கட்சிகளுக்கும் வெற்றிகரமான நிதி திரட்டும் காலாண்டாக இருந்தது. லிபரல் மற்றும் NDP ஆகியன வருடாந்த நன்கொடைகளில் மூன்றில் ஒரு பங்கை இந்த இறுதிக் காலாண்டில்தான் பெற்றுக் கொண்டன.

2024 ஆம் ஆண்டில் வலுவான நிதி திரட்டல் மூலம் நம்பிக்கையை பெற்றுள்ள கன்சர்வேட்டிவ்கள் கனேடிய மக்கள் தற்போது தேர்தலை விரும்புகிறார்கள் என்று கூறி வருகின்றனர்.

மறுமுனையில் NDP கட்சியினரும் மக்களிடமிருந்து கிடைத்துள்ள கணிசமான நன்கொடையுடன் நிதி ஸ்திரத்தன்மையை கொண்டிருப்பதால் தமது கட்சியும் வலுவான தேர்தல் பிரச்சாரத்தை நடத்தத் தயாராக இருப்பதாக கூறுகின்றனர்.

March 24 ஆந் திகதி House of Commons கூடவுள்ள நிலையில் வசந்தகாலத் தொடக்கத்தில் நடைபெறக்கூடிய பொதுத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயார்நிலையில் இருப்பதுடன் அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் என்றும் கூறிவருகின்றன.

Related posts

Toronto வாகன திருட்டு காப்பீடு கோரிக்கைகள் 2018 முதல் 561 சதவீதம் அதிகரிப்பு – Ontario இல் $1B இற்கும் அதிகமான உரிமைகோரல்

admin

Air Canada ஒப்பந்தம் பணிநிறுத்தத்தைத் தவிர்க்கிறது, பயணிகள் மற்றும் வணிகக் குழுக்கள் பயனடைகின்றன

admin

New York இல் பயங்கரவாத சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் கனடியர் ஒருவர் Quebec இல் கைது செய்யப்பட்டார்

admin