கனடா செய்திகள்

பாலஸ்தீனியர்களை வெளியேற்றி கனடாவில் குடியேற்றிவிட்டு தனது தேசத்தை விஸ்தரிக்க நினைக்கிறதா இஸ்ரேல்.?

காசா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் யோசனை குறித்து கனேடிய அரசியல்வாதிகள் பின்னடித்து வருகின்றனர். காசாவிலிருந்து வெளியேற்றப்படும் சிலரை கனடாவுக்கு அனுப்பலாம் என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் கூறியதன் பின்னணியே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் கருத்துரைத்த அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மத்திய கிழக்கு மற்றும் அதனையண்டிய சில பிரதேசங்களை அமெரிக்காவின் உல்லாச தலங்களாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார். இதனை மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் அதே போன்ற சில குழுக்கள் Trump இன் இத்திட்டம் இன அழிப்புக்கு சமம் என்று வர்ணித்திருந்தன.

கடந்த வியாழக்கிழமை X தளத்தில் கருத்து வெளியிட்ட இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Israel Katz காசாவிலிருந்து வெளியேற விரும்பும் எவரையும் வெளியேற்றி வெளிநாடுகளில் விருப்பமுள்ள நாடுகளுக்கு மீள்குடியேற்றுவதற்கான திட்டத்தை வரைவு செய்ய இஸ்ரேலிய இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக பதிவிட்டார். அத்துடன் கட்டமைக்கப்பட்ட குடியேற்றத் திட்டத்தைக் கொண்ட கனடா போன்ற நாடுகள் காசாவில் இருந்து குடியிருப்பாளர்களை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் எழுதினார்.

கனடாவில் உறவினர்களை உள்ளவர்கள் தற்போது Ottawa இல் மாத்திரம் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஓர் வரையறுக்கப்பட்ட தொகையாகும்.

இது குறித்து இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான மையம் ஒட்டாவாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு உடனடியாக பதில் எதனையும் வழங்கவில்லை.

Related posts

Sudan இல் மற்றொரு இனப்படுகொலையை அறிவிக்க அமெரிக்காவுடன் கனடாவை இணையுமாறு மனித உரிமைகள் குழு வேண்டுகோள்

admin

Toronto பயங்கரவாத சந்தேக நபர் 2018 இல் கனடாவுக்கு வந்தார்

admin

LCBO தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்

admin