கனடா செய்திகள்

குடும்ப தினத்தன்று (Family Day) கட்சிகளிடையே நடைபெறவுள்ள விவாதமும் நேரலை விபரங்களும்!

ர்தல் பிரச்சாரங்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கிவரும் நிலையில் Ontario வின் நான்கு முக்கிய அரசியல் கட்சி தலைவர்களான PC – Doug Ford, Liberal – Bonnie Crombie, NDP – Marit Stiles, Green Party – Mike Schreiner ஆகியோர் குடும்ப தினத்தன்று (Family Day) 90 நிமிட விவாதத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை மாலை 6:30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ள குறித்த நேரடி விவாதத்தின் ஔிபரப்பு பங்காளிகளாக CTV News, CP24, CBC, Global, TVO, CHCH, CPAC, CityNews மற்றும் OMNI News ஆகியன இணைந்துள்ளன.

இந்த விவாதத்தை CBC யின் David Common நடத்துவார். அத்துடன் Siobhan Morris, Colin D’Mello ஆகியோர் கேள்விகளை கேட்பதற்காக இணையவுள்ளனர்.

இந்த நிகழ்சியை நீங்கள் CP24 மற்றும் CTV இலும் CP24.com, CP24 app, CTVNewsToronto.ca மற்றும் CTV News app போன்றவற்றில் நேரலையில் பார்வையிடலாம்.

Related posts

கனேடியப் பெண் ஒருவர் ஆழ்கடலில் புகைப்படம் எடுத்து “உலக சாதனை” படைத்துள்ளார்.

Editor

ஜேர்மனியுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் கனடா.

canadanews

Ontario இல் அதிகரித்து வரும் Mpox தொற்று நோய் – public health agency

admin