கனடா செய்திகள்

Washington இல் முகாமிடும் கனேடிய முதல்வர்கள். அடுத்து நடக்கப்போவது என்ன?

அமெரிக்க அதிபர் Donald Trump இன் இரும்பு மற்றும் அலுமினிய கட்டணங்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் விரிவடைந்து வரும் வர்த்தகப் போர் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக கனடாவின் முதல்வர்கள் Washington இல் உள்ளனர்.

கனடாவின் 13 மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களின் தலைவர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி வருகின்ற தலைவரான Ford இந்தவாரம் Washington இற்கு ஒரு வர்த்தகப் பயணத்தை மேற்கொண்டு, அமெரிக்காவின் சட்டமியற்றுபவர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியம் மீது 25 சதவீத வரிகளை விதிக்கும் Trump இன் நடைமுறை March 12 முதல் அமுலுக்கு வரவுள்ள நிலையில் இவை இரண்டையும் ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, அமெரிக்காவின் மிகப்பெரிய வாடிக்கையாளரான கனடாவை குறித்த வரிகளில் இருந்து விலக்களிப்பதற்காக Trump நிர்வாகத்தை அழுத்தம் கொடுக்கும் முகமாக கனேடிய முதல்வர்கள் இந்தவாரம் அமெரிக்காவின் பல முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

Related posts

கனேடிய வேலையின்மை விகிதம் June மாதத்தில் 6.4% ஆக உயர்வு

admin

ServiceOntario தொடர்பில் Ontario முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி!

Editor

Markham நகர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தமிழ்ப்பெண் உயிரிழப்பு

canadanews