கனடாவை 51வது மாநிலமாக மாற்றும் திட்டம் இன்னும் பரிசீலனையில் உள்ளதாக கூறும் வெள்ளை மாளிகையின் உயர் ஆலோசகர், அமெரிக்க அதிபர் Donald Trump இன் உத்தரவை மதித்து நடக்குமாறும் கனேடிய முதல்வர்கள் வெள்ளைமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது எச்சரிக்கப்பட்டதாகவும் கூறினார்.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் இணைந்து பணியாற்ற அவர்கள் உறுதியளித்துள்ள போதும் கனடா ஒருபோதும் 51வது மாநிலமாக இருக்காது என்று பிரிட்டிஷ் கொலம்பியா மமுதல்வர் David Eby புதன்கிழமை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும்போது கூறினார்.
புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானது என்று ஒன்ராறியோ முதல்வர் Ford கூறினார்.
வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரின் கருத்துப்படி கனேடிய இரும்பு மற்றும் அலுமினிய ஏற்றுமதிகளுக்கு 50 சதவீதம் வரை வரி விதிக்க வாய்ப்புள்ளது என்றார். மேலும் சில உத்தரவுகள் இந்தவாரம் வெளிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்