கனடா செய்திகள்

கனடாவின் பணவீக்க விகிதம் 1.9 சதவீதமாக மீண்டும் உயர்ந்துள்ளது

கனடாவின் பணவீக்க விகிதம் 1.9 சதவீதமாக மீண்டும் உயர்ந்துள்ளதால் Bank of Canada அதன் வட்டி விகிதக் குறைப்புகளை இடைநிறுத்தக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு, Bank of Canada எதிர்பார்த்த அளவுகளை விட சற்று அதிகமாக பணவீக்கம் அதிகரித்திருந்தமை, Manitoba மாகாணம் அதன் மாகாண எரிவாயு வரியை மீண்டும் 25.9 சதவீதம் அறிமுகப்படுத்தியமை மற்றும் January மாதத்தில் இயற்கை எரிவாயு விலைகள் 4.8 சதவீதம் அதிகரித்தமை போன்றன காரணங்களாக கூறப்படுகின்றன.

March மாதத்திற்குள் GST தடையின் தாக்கம் குறைவதால் எரிவாயு விலைகளின் விளைவுடன் பணவீக்கம் இரண்டு சதவீதத்திற்கு சற்று அதிகமாக இருக்கும் என்று CIBC எதிர்பார்க்கிறது என்றும் அமெரிக்காவின் கட்டண அச்சுறுத்தல் இல்லாவிட்டால், March12 அன்று கனடா வங்கி அதன் கொள்கை வட்டி விகிதத்தை வைத்திருக்க முயற்சிக்கும் என்றும் கனடாவின் மூத்த பொருளாதார நிபுணர் Andrew Grantham கூறினார்.

கனேடிய பொருளாதாரம் இவ்வாறிருக்க எதிர்வரும் நாட்களில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தவுள்ள கனேடிய இறக்குமதி பொருட்களுக்கான வரிகளைப்பொறுத்தே அடுத்த நிலைகளைப் பற்றி எதிர்வுகூறமுடியும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

கனடாவின் 4 முக்கிய நகரங்களில் போதைப்பொருள், துப்பாக்கி பயன்பாடு போன்ற குற்றங்கள் அதிகரிப்பு – CityNews கருத்துக்கணிப்பு

admin

கனடாவில் $18.4billion மின்சார வாகனங்கள் மற்றும் Battery plant களை உருவாக்குவதற்கு “HONDA”நிறுவனம் பரிசீலனை.

Editor

லிபரல் தலைமைப் பதவிக்கு அரசாங்க அவைத் தலைவர் Karina Gould போட்டியிடுவதாக கூறுகிறார்

canadanews