கனடா செய்திகள்

Ruby Dhalla கட்சி விதிகள் பலவற்றை மீறியதாக கட்சியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
Ruby Dhalla கட்சி விதிகள் பலவற்றை மீறியதாக கட்சியின் vote committee முடிவெடுத்ததை தொடர்ந்து லிபரல் தலைமைத்துவத்திற்கான போட்டியிலிருந்து கட்சியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தேசிய இயக்குனர் Azam Ishmael கூறுகையில் vote committee மற்றும் expense committee ஆகியன இணைந்து ஏக மனதாகவே இந்த முடிவு எடுத்ததாகவும் Dhalla பத்து மீறல்களை செய்துள்ளதாகவும் கூறினார்.

மீறல்கள் மிகவும் தீவிரமானது என Vote Committee முடிவெடுத்ததுடன் தேர்தல் தலைமை அதிகரியின் பரிந்துரையையும் ஏற்றுக்கொண்டு தேசிய தலைமைத்துவ விதிகளின் (National Leadership Rules) பிரிவு 8(i) இன் கீழ் Dr. Dhalla தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது பற்றி Dr. Dhalla கூறும்போது தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொய்யாக புனையப்பட்டதாக நிராகரித்தார். $350,000 கட்டுப்பணத்தில் இறுதி நுழைவுக்கட்டணத்தையும் தான் செலுத்திய பின்னரே கட்சி 27 கேள்விகளை தன்னிடம் கேட்டிருந்ததாகவும் கூறியதுடன் தான் கட்சியிடம் சமர்ப்பணம் ஒன்றை செய்துள்ளதாகவும் ஆனாலும் கட்சியிடமிருந்து எதையும் பெறுவதற்கு முன்னர் CBC செய்தியிடமிருந்தே முடிவை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார். அத்துடன் ஜனநாயகத்திற்கும் லிபரல் கட்சிக்கும் இது ஒரு சோகமான நாள் எனவும் விபரித்தார்.

Ottawa நாடாளுமன்ற உறுப்பினர் Chandra Arya உம் போட்டியின் தொடக்கத்திலேயே தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார் ஆனாலும் கட்சி பொது விளக்கம் எதனையும் வழங்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே தற்போது March 09 நடைபெறவுள்ள லிபரல் கட்சி தலைவருக்கான போட்டியில் முன்னாள் Bank of Canada ஆளுநர் Mark Carney, முன்னாள் நிதியமைச்சர் Chrystia Freeland, Montreal தொழிலதிபர் Frank Baylis மற்றும் முன்னாள் Liberal House தலைவர் Karina Gould ஆகிய நால்வருமே எஞ்சியுள்ளனர்.

Related posts

உற்பத்தி விற்பனை அதிகரிப்பால் May மாதத்திற்கான மொத்த வர்த்தகம் வீழ்ச்சி – Statistics Canada

admin

Toronto Pearson விமான நிலைய screeners இன் வேலைநிறுத்தத்தைத் தவிர்க்க தற்காலிக ஒப்பந்தம் கிடைக்கப்பெற்றது

admin

Toronto வெள்ளப்பெருக்கின் காப்புறுதிக் கோரிக்கைகள் மொத்தம் $1 பில்லியனாக இருக்கும் என மதிப்பீடு

admin