கனடா செய்திகள்

மீண்டும் தேர்தல் களத்தில் Anita Anand!

கடந்த January மாதம், Liberal கட்சித் தலைமைக்குப் போட்டியிடப் போவதில்லை என கூறிய Anita Anand மீண்டும் கல்வியாளராக தனது முன்னைய வாழ்க்கைக்குத் திரும்பப்போவதாகவும் கூறியிருந்தார். எனினும் தற்போது தனது முடிவை மாற்றியுள்ளதாகவும் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறுகிறார்.

அமெரிக்க ஜனதிபதியாக Donald Trump பதவியேற்பதற்கு முன்னரே தான் விலக முடிவெடுத்திருந்ததாக கூறும் Anand தற்போது அமெரிக்க வரி அச்சுறுத்தல்களுக்கு எதிராக கனேடிய மாகாணங்களை அணி திரட்டல் மற்றும் 51 ஆவது மாநிலமாக அழைக்கப்படும் ஆபத்திலிருந்து விடுபடுதல் போன்றவற்றை எதிர்கொள்வதற்காக தான் பதவியில் இருக்க வேண்டும் எனவும் விலக முடியாது என்றும் கூறுகின்றார்.

நாடு முழுவதிலும் இருந்து கிடைத்த ஆயிரக்கணக்கானவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே தான் கல்வித்துறைக்கு திரும்ப வேண்டிய நேரம் இதுவல்ல என முடிவை மாற்றிக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Ontario வின் Oakville தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறியுள்ள Anand இது ஒரு கடினமான போட்டியாக இருக்கும் என்றும் கனடாவைப் பொறுத்தவரை இது அரசியல் செய்யும் காலமல்ல நாட்டின் நலன் கருதிய ஓர் பொதுச் சேவைக்காலம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

வர்த்தகம் மற்றும் கட்டணங்கள் குறித்து விவாதிக்க பிரதமர்கள் புதன்கிழமை ட்ரூடோவை சந்திக்க உள்ளனர்

admin

கனடாவின் பொதுப் போக்குவரத்துக்கான நிதி பற்றாக்குறை

admin

ஆண்களுக்கான 4×100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் Andre De Grasse தங்கப் பதக்கம் வென்றார்

admin