கனடா செய்திகள்

மின்சார விநியோகத்தையும் நிறுத்துவதாக முதல்வர் Doug Ford அச்சுறுத்துகிறார்

எங்கள் மீது வரிகள் திணிக்கப்பட்டால் நாங்கள் கடுமையாக பதிலளிப்போம் என்றும் கனேடிய பொருட்கள் மீதான 25 சதவீத வரிகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதால் அமெரிக்கா பயன்படுத்தும் 50 சதவீதமான Ontario வின் Nickel ஐயும் மின்சார விநியோகத்தையும் நிறுத்துவதாக முதல்வர் Doug Ford அச்சுறுத்துகிறார்.

இந்த வரிவிதிப்பு இரு நாடுகளுக்கும் முழுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எல்லையின் இருபுறமும் வசிப்பவர்களுக்கு பாரிய பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் Ford மேலும் கூறினார்.

நாங்கள் New York, Michigan மற்றும் Minnesota ஆகிய அமெரிக்க நகரங்களின் 1.5 மில்லியன் வீடுகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் விளக்குகளை ஔியூட்டுகின்றோம் ஆனால் Trump நமது பொருளாதாரத்தையும் எங்கள் குடும்பங்களையும் பாதிக்க விரும்பினால், அமெரிக்காவிற்கு செல்லும் மின்சாரத்தை நான் நிறுத்துவேன் என்றார் Ford.

கனடாவைப் பாதுகாக்கவும், ஒன்ராறியோ மக்களையும் அவர்களின் வணிகங்கள், சமூகங்கள் மற்றும் வேலைகளையும் பாதுகாக்கவும் நாங்கள் இதற்கு முன்னர் எப்போதும் போராடாதது போல் போராட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்கா முன் எப்போதும் பார்த்திராததைப் போல் நாம் பதிலளிப்போம் அமெரிக்க இராணுவத்தேவைகள் உள்ளிட்ட பலவற்றுக்கு தேவையான கனிமங்களை கனடா இடைநிறுத்துவதால் அமெரிக்கா மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கும் இவை அனைத்திற்கும் Trump ஒருவர்தான் காரணம் எனவும் Ford தெரிவித்தார்.

கனடா-அமெரிக்க எல்லையில் பெரும்பாலான கனேடிய பொருட்களுக்கு 25 சதவீத, Ontario வில் 500,000 வேலை வாய்ப்புக்களை இழக்க நேரிடும் என்று Ford முன்னர் எச்சரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Trump இன் வரிகளுக்கு பதிலளிக்க எல்லாம் மேசையில் உள்ளது – பிரதமர் Trudeau

canadanews

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற Donald Trump இற்கு Trudeau வாழ்த்து தெரிவிப்பு

admin

Quebec வரலாற்று மழையில் இருந்து மீண்டு வருகிறது

admin