கனடா செய்திகள்

Howard Lutnick ஜனாதிபதி Trump ஓர் உடன்பாட்டை எட்டுவார் என்று தான் நம்புவதாக கூறினார்

வரிகள் இடைநிறுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறும் அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் Howard Lutnick ஜனாதிபதி Trump ஓர் உடன்பாட்டை எட்டுவார் என்று தான் நம்புவதாக கூறினார். இந்த விடயம் தொடர்பாக கனடா மற்றும் மெக்சிக்கோவை அமெரிக்கா சந்திக்கவுள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பு புதன்கிழமையளவில் வரும் எனவும் வர்த்தக செயலாளர் Lutnick கூறுகிறார்.

தற்போது கனடா உடனடியாக எதிர் நடவடிக்கைகளுடன் பதிலளித்துள்ளது. 30 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க தயாரிப்புகள் மீது 25 சதவீத பழிவாங்கும் வரிகளை விதிக்கிறது,
மிகுதி 125 பில்லியன் டொலர் மதிப்புள்ள வரிகள் தொடர்ந்துவரும் 21 நாட்களில் விதிக்கப்படும் என கனடா ஏற்கெனவே அறிவித்துள்ளது.

கனடா, உலக வர்த்தக அமைப்பு (WTO) மூலம் Canada-United States-Mexico Agreement (CUSMA) எனும் ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்தும் என்று பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

இதனிடையே மெக்சிக்கோவும் அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு எதிராக அதன் பதிலடி வரிகளால் பதிலளிக்கும் என்று அதிபர் Claudia Sheinbaum கூறினார். இது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related posts

லிபரல் மற்றும் NDP கட்சிகளை விட வலுவான நிதி திரட்டலுடன் பொதுத் தேர்தலுக்கு தயாராகும் கன்சர்வேட்டிவ் கட்சி

canadanews

Haitiக்கான பாதுகாப்புப் படைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக Jamaicaவிற்கு கனேடிய ஆயுதப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன

admin

வியாழன் முதல் 4,100 Ontario convenience stores மது விற்பதற்கான உரிமம் பெற்றுள்ளன

admin