வெப்பமான பிரதேசங்களுக்காக அமெரிக்கா நோக்கிச் செல்லும் கனேடிய மக்களில் அநேகமானவர்கள்
தமது விடுமுறைக்காலங்களை அமெரிக்கா என்ற தெரிவிலிருந்து விலகி மெக்சிக்கோ மற்றும் கரீபியன் போன்ற இடங்களை தேர்வு செய்கின்றனர்.
அமெரிக்க நகரங்களுக்கான பொழுதுபோக்கு முன்பதிவுகள் 2024 ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது February 40 சதவீதம் குறைந்துள்ளதுடன், கடந்த மூன்று மாதங்களில் ஐந்து வாடிக்கையாளர்களில் ஒருவர் அமெரிக்காவிற்கான பயணங்களை இரத்து செய்துள்ளதாகவும் பயண நிறுவனமான Flight Centre Travel Group Canada தெரிவித்துள்ளது.
spring break காலத்தில் கனேடியர்களால் அதிகம் விரும்பப்படும் அமெரிக்க நகரங்களான Florida, Las Vegas மற்றும் Arizona ஆகியவற்றுக்கான விமானங்களை 10 சதவீதம் குறைப்பதாக Air Canada கடந்த மாதம் அறிவித்தது.
கனேடியப் பொருட்களுக்கு எதிரான கடுமையான வரிகள் காரணமாக கனேடிய மக்கள் தங்கள் தெற்கு அண்டை நாடு மீது திடீரென வெறுப்பு காட்டுவது Trump இன் வரிகளுக்கு ஓர் பின்னடைவாகவே கருதப்படுகின்றது. இந்த Trump எதிர்பு அலை அமெரிக்கா- கனடா உறவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.