கனடா செய்திகள்

பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை தேர்தலுக்கான அழைப்பை வெளியிடுவார்

April 28 ஆந் திகதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னாள் பிரதமர் Justin Trudeau ஒத்திவைத்த நாடாளுமன்றம் March 24 ஆந் திகதி மீண்டும் கூடவுள்ளநிலையில் அதற்கு முதல் நாளான March 23 ஆந் திகதி ஆளுநரிடம் நாடாளுமன்றத்தை கலைக்க கோருவார் என நம்பப்படுகிறது.

நாடுமுழுவதும் கட்சிகள் தங்கள் அலுவலகங்களை அமைத்து உள்ளூர் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகின்றன. லிபரல் கட்சியும் தேர்தலுக்காக நீண்ட நிகழ்ச்சி நிரலுடன் தயாராகியுள்ளதாக தெரியவருகின்றது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் திட்டங்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை. இதனிடையே அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தகக் கொள்கைகள் கனேடியர்கள் மத்தியில் லிபரல்களின் கொள்கைகளுக்கான ஆதரவை பலப்படுத்தியுள்ளதாக கருதப்படுகின்றது.

அண்மைய Angus Reid Institute இன் கருத்துக் கணிப்பின் படி கன்சர்வேட்டிவ்கள் மற்றும் அதன் தலைவர் Pierre Poilievre விட ஐந்து புள்ளிகள் அதிகமான ஆதரவுடன் லிபரல்களின் ஆதரவு 42 ஆக சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கனேடியர்கள் மத்தியில் பிரதமர் Carney க்கு அதிகரித்துள்ள ஆதரவும் லிபரல்களின் ஆதிக்கத்திற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Related posts

Jasper காட்டுத்தீயினால் வெளியேற்றப்பட்ட அதிகாரிகளை Trudeau சந்தித்தார்

admin

ஆகஸ்டில் சிறிய சந்தைகளில் வாடகை உயர்வு பெரிய சந்தைகளில் வீழ்ச்சியை விட அதிகமாக இருந்தது

admin

NATO உச்சிமாநாட்டின் மையத்தில் Ukraine இருப்பதால் உறுதியுடன் இருக்குமாறு நட்பு நாடுகளுக்கு Trudeau தெரிவிப்பு

admin