கனடா செய்திகள்

பொதுத் தேர்தலில் 5 தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

April 28ம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில்  Liberal, Conservative கட்சிகளில் தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

Liberal கட்சிகளின் சார்பில் Oakville கிழக்கு தொகுதியில் அனிதாஆனந்த், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி, Pickering–Brooklin தொகுதியில் ஜுனிதா நாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஜுனிதா நாதன், Markham நகரின் 7-ஆம்வட்டார உறுப்பினராக உள்ளார்.கனடியர்கள் ஒரு புதிய அரசாங்கத்தை April 28 ஆம் திகதி தேர்ந்தெடுப்பார்கள்.

அனிதாஆனந்த், ஹரிஆனந்தசங்கரி இருவரும் கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப்பதவிகளை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Conservative கட்சிகளின் சார்பில் இம்முறை இரண்டுதமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

Markham Stouffville தொகுதியின் நிரான் ஜெயநேசன், Markham Thornhill தொகுதியில் லியோனல் லோகநாதன் Conservative கட்சிவேட்பாளராக இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

Related posts

தென்னாப்பிரிக்காவின் ICJ வழக்கை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பிரதமர் Trudeau !

Editor

Freeland இன் ராஜினாமாவைத் தொடர்ந்து Trudeau நிதியமைச்சராக LeBlanc இனை நியமித்துள்ளார்

admin

திங்களன்று Toronto, GTA இல் 10cm வரை பனி காணப்படலாம்

admin