கனடா செய்திகள்

இரண்டு தமிழர்களும் மேலதிக குற்றச்சாட்டுக்களுடன் கைது!

Pickering இன் முதல் நிலை கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு தமிழர்களும் மேலதிக குற்றச்சாட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். Markham இல் வசிக்கும் கோகுலன் பாலமுரளி மற்றும் Toronto இல் வசிக்கும் பிராணன் பாலசேகர் ஆகிய 24 வயதுகளையுடைய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற ஆவணங்களில் பெறப்பட்ட தகவல்களிலிருந்து குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரண்டு சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். பின்னர் பாலமுரளி மற்றும் பாலசேகர் ஆகியோர் மீது தண்டனைக்குரிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அதாவது மூன்று முதல் நிலை கொலைக்கு சதி செய்தமை மற்றும் தண்டிக்கக்கூடிய வகையில் சொத்துக்களை சேர்த்தமை ஆகிய இரு குற்றச்சாட்டுக்களுமே அவையாகும். பாலமுரளி மற்றும் பாலசேகர் ஆகியோர் April 11 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Bank of Canada இன் முன்னாள் governor ஆன Carney அடுத்த வாரம் Liberal caucus retreat பேசவுள்ளார்

admin

கனடாவின் ரயில் வேலைநிறுத்தம் மூன்று பெரிய நகரங்களில் 32,000 க்கும் மேற்பட்ட பயணிகளை பாதிக்கும் 

admin

Air Canada விமானிகள் அடுத்த மாத தொடக்கத்தில் நிறுத்தத்தில் ஈடுபடலாம்

admin