கனடா செய்திகள்

கனடாவில் 20 சதங்களால் குறையும் எரிபொருள் விலை

April 01 ஆந் திகதி முதல் நுகர்வோர் காபன் வரி இரத்துச் செய்யப்படும் என்ற பிரதமர் Carney இன் கொள்கைக்கு அமைவாக Greater Toronto பகுதி உட்பட நாடு முழுவதும் ஒரேநாளில் எரிவாயு விலை குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்துறை ஆய்வாளர் Dan McTeague இன் கணிப்பின்படி ஒரே நாளில் எரிவாயு விலைகள் 20 சதம் குறையும் என்று மதிப்பிட்டுள்ளார். பெட்ரோலுக்கான தற்போதைய காபன் வரி லீற்றருக்கு 17.61 சதமாகவுள்ளதாகவும், Ontario வில் April 01 ஆந் திகதி தொடக்கம் நிரப்பு நிலையங்களில் லீற்றருக்கு குறைந்தது 19.9 சதமாக குறையும் என்றும் McTeague கூறுகிறார்.

இவற்றில் gasoline மட்டுமல்லாது diesel மற்றும் விமான எரிபொருள், இயற்கை எரிவாயு போன்றவையும் உள்ளடங்குகிறது. காபன் வரியை தொடர்ச்சியாக எதிர்த்து வரும் Ontario முதல்வர் Doug Ford இது தொடர்பில் கருத்து வெளியிட்டபோது இதுவரை இல்லாத மோசமான வரி என காபன் வரியைப் பற்றிக் கூறினார்.

Related posts

பலப்படுத்தப்படும் கனேடிய எல்லை பாதுகாப்பு

canadanews

நேருக்கு நேர் சந்திப்பிற்குப் பின்னர் Carney மற்றும் Poilievre ஒன்றிணைந்து செயல்பட இணக்கம்.

canadanews

Ford இன் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் Caroline Mulroney அரசியலில் இருந்து விலகுகின்றார்.

canadanews